அஜித்துடன் நடித்த எஸ். ஜே. சூர்யா எந்த மூவி தெரியுமா.? வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து ஓடிக் கொண்டிருப்பவர் நடிகர் அஜித். துணிவு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து  மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா தயாரிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.

படம் ஆக்சன் திரில்லர் படமாக உருவாகி வருகிறது அஜித் இரட்டை வேடத்தில் நடிக்க த்ரிஷா, ரெஜினா, அர்ஜுன், ப்ரியா பவானி சங்கர், சஞ்சய் தத். ஆரவ் என மிகப் பெரிய பட்டாளமே நடிப்பதால் விடாமுயற்சி படத்திற்கான எதிர்பார்ப்பு உச்சத்தில்  இருந்து வருகிறது.

33 வருடங்களுக்கு முன்பே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட பிக் பாஸ் 7 பிரபலம்..

விடாமுயற்சி அடுத்த வருடம் கோடை அல்லது அஜித்தின் பிறந்தநாள் மே ஒன்றாம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் அஜித்துடன் இணைந்து எஸ் ஜே சூர்யா ஒரு படத்தில் நடித்திருக்கிறார் அது குறித்து இங்கு விலாவாரியாக பார்ப்போம்..

எஸ் ஜே சூர்யா முதலில் உதவி இயக்குனராக இருந்து பின் இயக்குனர் அவதாரம் எடுத்தார் ஒரு கட்டத்தில் நடிகராக என்ட்ரி கொடுத்து தற்பொழுது மாஸ் காட்டி வருகிறார். எஸ் ஜே சூர்யா அஜித்தின் ஆசை படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினார் அப்பொழுது ஒரு காட்சியில் ஆட்டோ ஓட்டுனர் ஆக நடித்திருப்பார்.

விண்ணை தொடும் வசூல்.. இதோ ஃபைட் கிளப் அதிகாரபூர்வ வசூல் நிலவரம்…

அப்பொழுதுதான் அஜித்துக்கும், சூர்யாவுக்கும் பழக்கம் ஏற்பட அந்த சமயத்தில் எஸ்.ஜே சூர்யா வாலி படத்தின் கதையை கூற ரொம்ப பிடித்து போகவே அஜித் எஸ் ஜே சூர்யா உடன் இணைந்து வாலி படத்தில் நடித்தார் அந்த படம் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இதோ ஆசை படத்தில் எஸ் ஜே சூர்யா ஆட்டோ ஓட்டுனராக நடித்த அந்த காட்சியை புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

SJ Suryah
SJ Suryah