33 வருடங்களுக்கு முன்பே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட பிக் பாஸ் 7 பிரபலம்..

Super Star Rajinikanth: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இளம் வயதில் பிக் பாஸ் பிரபலம் எடுத்துக்கொண்ட புகைப்படம் போன்ற சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் ரஜினிகாந்த் 73 வயதை கடந்த பிறகும் அதே ஸ்டைல், நடிப்புடன் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து வருகிறார்.

அந்த வகையில் இவருடைய நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து வருகிறது. கடைசியாக இவருடைய நடிப்பில் ஜெயிலர் திரைப்படம் வெளியாகி உலக அளவில் பல கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த படத்தினை தொடர்ந்து ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

விண்ணை தொடும் வசூல்.. இதோ ஃபைட் கிளப் அதிகாரபூர்வ வசூல் நிலவரம்…

இந்நிலையில் தற்பொழுது பிக் பாஸ் நிகழ்ச்சியில் 7வது சீசனில் பங்கு பெற்று வரும் நடிகை விசித்ரா ரஜினிகாந்த் உடன் இளம் வயதில் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. தமிழ் திரை உலகில் மூத்த நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் விசித்ரா சமீப காலங்களாக திரைப்படங்களில் நடிக்கவில்லை என்றாலும் சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு போன்ற பல மொழிகளில் நடித்து பிசியாக இருந்து வந்தார்.

கடைசியாக 2002ஆம் ஆண்டு வெளியான இரவு பாடகன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு தனது மூன்று மகன்களையும் கவனித்து வரும் விசித்ரா சினிமாவை விட்டு விலகினார். அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்குப் பெற்றார்.

2023ல் பட்டைய கிளப்பும் என எதிர்பார்க்கப்பட்டு பல்பு வாங்கிய திரைப்படங்கள்.. அட லிஸ்டில் இத்தனை திரைப்படங்களா..

இதனை தொடர்ந்து தற்பொழுது பிக் பாஸ் நிகழ்ச்சியில் 77 நாட்களைக் கடந்து பயணித்துக் கொண்டிருக்கிறார். இவ்வாறு இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் ரஜினிகாந்த் உடன் இளம் வயதில் விசித்ரா 33 வருடங்களுக்கு முன்பு எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

super star rajinikanth
super star rajinikanth