2023 – ல் அதிக நெகட்டிவ் கமெண்டுகளை வாங்கிய 5 படங்கள்.. சூப்பர் ஸ்டார் பெயரை டேமேஜ் செய்த சிஷ்யன்

2023 ல் வெளியான பல படங்கள் வெற்றி பெற்று இருந்தாலும் ஒரு சில படங்கள் விமர்சனம், வசூல் ரீதியாக மண்ணை கவ்வி இருக்கிறது அப்படிப்பட்ட படங்களை பற்றி இங்கு பார்ப்போம்..

சந்திரமுகி 2  : வாசு இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்து ஹிட் அடித்த திரைப்படம் சந்திரமுகி.  பார்ட் 2 படத்தை ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து இருந்த நிலையில் இந்த ஆண்டு வெளியானது அந்த  அளவுக்கு திரில்லர் இல்லை மேலும் ஆங்காங்கே சில ஓட்டைகள் தென்பட்டன அதனாலயே படம் ரசிகர்கள் மத்தியில் எடுபடாமல் வசூல் ரீதியாக மண்ணை கவியது.

அஜித்துடன் நடித்த எஸ். ஜே. சூர்யா எந்த மூவி தெரியுமா.? வைரலாகும் புகைப்படம்

தலைநகரம் 2 : சுந்தர் சி நடித்த தலைநகரம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்ததை தொடர்ந்து 17 வருடங்கள் கழித்து பார்ட் 2 வெளியானது இந்த படத்தில் காமெடிக்கு வேலையே இல்லை ஆக்சன் மட்டும் தான்.கதை வீக்காக இருந்ததால் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் சலிப்பை ஏற்படுத்தியது. மொத்தத்தில் தலைநகரம் 2 சொதப்பல்..

ஜப்பான் : ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தியின் 25 வது திரைப்படம் இது படத்தின் கதை என்னவென்றால் 200 கோடி நகைக்கு கொள்ளையை கார்த்தி தான் ஆட்டையை போட்டு விட்டான் என போலீஸ் அவனை தீவிரமாக தேடுகிறது. இந்த படத்தை சூப்பராக எடுத்திருக்கலாம். ஆனால் கதையில் மிஸ்டேக் செய்தனர் அதனால் கார்த்தியின் ஜப்பான் திரைப்படம் சுமாராக ஓடியது. வசூல் ரீதியாக தோல்வியை கொண்டது.

இறைவன் : ஒரு சைக்கோ கொலைகாரன் இளம் பெண்களை கொடூரமாக கொலை செய்கிறான் அவனை முதலில் பிடித்து விடுகின்றனர் அவன் ஒரு கட்டத்திலே எஸ்கேப் ஆகி மீண்டும் பார்ப்பவர்களை கொலை செய்கிறான் அவனை போலீஸ் கண்டுபிடித்ததா என்பதுதான் படத்தின் கதை படத்தை விறுவிறுப்பாக எடுத்து இருக்கலாம் ஆனால் தவறிவிட்டது.

காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் : புது கதைகள் வந்தாலும் காலம் காலமாக மண்ணுக்கும், பொண்ணுக்கும் நடக்கும் சண்டை கதை  அவ்வபொழுது படமாகி கொண்டு தான் இருக்கிறது அந்த வகையில் இந்த படம் இருந்தாலும் பழைய கதையாகவே இருந்ததால் ரசிகர்கள் மத்தியில் ஈடுபடவில்லை.