வெங்கட் பிரபு வைத்த டைட்டிலை மாற்றிய வாலி.. அப்புறம் என்ன படம் டாப் ஹிட்டு தான்…

Vengat Prabhu: வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் தான் சென்னை 600028. இப்படத்திற்கு முதலில் வேறு ஒரு பெயர் வைக்கப்பட்டதாகவும் அதன் பிறகு கவிஞர் வாலி மாற்றி தான் சென்னை 600028 என்ற பெயருடன் ரிலீசானதாக கூறப்படுகிறது.

கங்கை அமரனின் மூத்த மகன் தான் வெங்கட் பிரபு ஹீரோவாக சினிமாவிற்கு அறிமுகமான இவர் பெரிதாக ஒர்க் அவுட் ஆகாத காரணத்தினால் இயக்குனராக அவதாரம் எடுத்தார். அப்படி உதவி இயக்குனராக பணியாற்றாத வெங்கட் பிரபு நேரடியாக தமிழில் வெளியான சென்னை 600028 படத்தை இயக்கினார்.

காமெடியனாக இருந்தாலும் ரசிகர்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்த 5 காமெடி நடிகர்கள்..

இப்படத்தை எஸ்பிபி-யின் மகன் சரண் தயாரிக்க கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவான இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்தார். சென்னை 600028 படத்தில் சிவா, விஜயலட்சுமி, நிதின், சத்யா, பிரேம்ஜி போன்ற ஏராளமான பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

மேலும் இப்படத்தில் உதவி இயக்குனராக பா ரஞ்சித் பணியாற்ற இந்தப் படத்துக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இப்படத்திற்கு வைக்கப்பட்ட பெயர் சென்னை 28 இல்லையாம் வெங்கட் பிரபு வேறு ஒரு பெயரை யோசித்து வைக்க பிறகு வாலி தான் இதனை மாற்றியுள்ளார்.

கோடி கோடியாக கொட்டிக் கொடுத்தாலும் என்னால் முடியாது என விஜயகாந்த் நடிக்கு மறுத்த 5 கதாபாத்திரங்கள்..

அதன்படி வெங்கட் பிரபு எங்க ஏரியா உள்ள வராத என்ற பெயரை தான் வைத்திருந்தாராம். தலைப்பை வாலியிடம் சொன்னபோது அவர் இப்படி தலைப்பு வச்சா படத்தை எவனும் வாங்க வர மாட்டாயா, சென்னை 28-னு வை என சொல்லி அனுப்பி உள்ளார். எனவே வாலியின் பேச்சை கேட்டு வெங்கட் பிரபு டைட்டில் வைத்துள்ளார் அதன்படியே இந்த படமும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்ததால் தற்பொழுது வரையிலும் தனது அனைத்து படங்களிலும் வாலிக்கு நன்றி சொல்லிவிட்டு தான் ஆரம்பிப்பதாக கூறப்படுகிறது.