காமெடியனாக இருந்தாலும் ரசிகர்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்த 5 காமெடி நடிகர்கள்..

5 Comedy Actors Sentiment Movie: ஏராளமான காமெடி நடிகர்கள் தன்னை தாழ்வாக பேசி பிரபலமாகுவது வழக்கம் இவ்வாறு தொடர்ந்து ரசிகர்களை சிரிக்க வைத்த சில நடிகர்கள் ரசிகர்களை அழ வைக்கவும் தெரியும் என நிரூபித்து காண்பித்துள்ளனர். அப்படிப்பட்ட 5 நடிகர்கள் குறித்து பார்க்கலாம்.

எம்.எஸ் பாஸ்கர்: நகைச்சுவை நடிகர் எம்.எஸ் பாஸ்கர் கடைசியாக ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான பார்க்கிங் படத்தில் ஈகோ பிடித்த ஆளாக நடித்திருந்தாலும் கிளைமாக்ஸ் காட்சிகள் தனது பெரிய மனுஷன் தன்மையினால் ஹீரோவாக மட்டுமல்லாமல் ஆடியன்சை கண் கலங்க வைத்திருப்பார்.

மேகனாவின் மொபைல் தமிழிடம் சிக்கியது.. அடுத்த ஆதாரத்தைக் காட்டி அர்ஜுனை நடுநடுங்க வைத்த தமிழ்..

சார்லி: பல படங்களில் காமெடியனாக நடித்திருக்கும் சார்லி 90 காலகட்டத்தில் இருந்து தற்போது வரையிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். அப்படி வெற்றி கொடி கட்டு படத்தில் இவருடைய செண்டிமெண்ட் ஆன பெர்ஃபாமன்ஸ் ரசிகர்களால் பெரிய அளவிலும் பாராட்டப்பட்டது. இன்று இவருடைய பர்ஃபார்மன்ஸ் பார்த்தாலும் ரசிகர்கள் கண் கலங்குவார்கள்.

தம்பி ராமையா: தம்பி ராமையா அறிமுகமான காலகட்டத்தில் இருந்து சின்ன சின்னதாக சென்டிமென்ட் காட்சிகளில் நடித்துள்ளார் இருந்தாலும் இவருடைய வினோதய சித்தம் படத்தில் தனது எதார்த்தமான நடிப்பினால் ஆடியன்ஸை கண்ணீர் வெல்லத்தின் மூழ்கடித்திருப்பார்.

வடிவேலு: பல முன்னணி நடிகர்களின் படங்களில் செண்டிமெண்டாக நடித்திருக்கும் வடிவேலு தற்பொழுது மீண்டும் கம்பேக் கொடுத்து இளம் நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து வருகிறார். அப்படி உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் கடைசியாக வெளியான மாமன்னன் படத்தில் இவருடைய பெர்ஃபார்மன்ஸ் மூலம் தரமான சம்பவத்தை செய்திருப்பார்.

திரையுலகில் எந்த நடிகையும் செய்யாததை செய்து காட்டி அதிர்ச்சி கொடுத்த நடிகை..

விவேக்: நடிகர் விவேக் முழுக்க முழுக்க கமர்சியல் ஹீரோவாக வெள்ளைப் பூக்கள் படத்தில் மிரட்டினார். இப்படத்தில் காமெடி, சென்டிமென்ட் என அனைத்தாலும் ரசிகர்களை பெரிதளவிலும் கவர்ந்தார்.