லியோ படம் எப்படி இருக்கு.. பார்த்துவிட்டு ட்வீட் போட்ட உதயநிதி.! சோகத்தில் இயக்குனர் லோகேஷ்

Leo Movie : தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக வருவர் தளபதி விஜய். இவர் லோகேஷ் உடன் மீண்டும் கூட்டணி அமைத்து லியோ திரைப்படத்தில் நடித்துள்ளார் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி கோலாகலமாக வெளியாக இருக்கிறது. தற்பொழுது பல இடங்களில் முன்பதிவு தொடங்கியுள்ளது ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு  புக் பண்ணி வருகின்றனர்.

முன்பதிவில் மட்டுமே பல கோடி வசூலித்துள்ளதாம். ரிலீஸ் ஆனால் நிச்சயமா 1000 கோடிக்கு மேல் வசூல் செய்யும் என பலரும் கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர். லியோ படம் மிகப்பெரிய ஒரு ஆக்சன் பேக் படமாக உருவாகியுள்ளது படத்தில் விஜய் உடன் இணைந்து அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலி கான், கௌதம் வாசுதேவ் மேனன், சஞ்சய் தத்,  சாண்டி மாஸ்டர், பிக்பாஸ் ஜனனி, த்ரிஷா, ப்ரியா ஆனந்த் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர்.

எதிர்பார்ப்பை எகிற வைத்த லியோ திரைப்படத்திற்கு லோகேஷ் கனகராஜ் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

படம் வெளிவர இன்னும் சில நாட்களில் இருப்பதால் லியோ படத்தை பற்றி லோகேஷ் கனகராஜ் மற்றும் படத்தில் பணியாற்றிய பலரும் பேசி வருகின்றனர் இந்த நிலையில் நடிகரும், அரசியல்வாதியமான உதயநிதி ஸ்டாலின் லியோ படம் குறித்து ஒரு ட்வீட் போட்டுள்ளார் அவர் சொன்னது என்னவென்றால்..

உதயநிதி ஸ்டாலின் விஜய்யின் லியோ படத்தை முழுவதுமாக பார்த்துவிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் தளபதி விஜய் அண்ணா.. லியோ ஒரு சிறந்த படம் ஃபிலிம் மேக்கர் லோகேஷ் கனகராஜ், சண்டை மாஸ்டர் அன்பறிவு, இசையமைப்பாளர் அனிருத் போன்றவர்கள் பின்னி படலெடுத்துள்ளனர் என குறிப்பிட்டார் பிறகு ஹேஷ்டேக் LCU என குறிப்பிட்டிருந்தார்.

பாட்ஷா ரீமேக்கில் அஜித் தான் நடிக்க வேண்டும்.. சரியான காரணத்தை சொல்லி அதிரவிட்ட சினிமா பிரபலம்

இதை வைத்து பார்த்தால் இந்த படம் LCU வில் இணைவது உறுதி என தெரியவந்துள்ளது லோகேஷ் கனகராஜ் லியோ படம் ரிலீசுக்கு முன்பு பல பேட்டிகள் கொடுத்து வந்தாலும் LCU வில் படம் இணைவது குறித்து அவர் சொல்லவே இல்லை ஆனால் உதய் நிதி அதை போட்டு உடைத்துள்ளது தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.