எதிர்பார்ப்பை எகிற வைத்த லியோ திரைப்படத்திற்கு லோகேஷ் கனகராஜ் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

lokesh kanagaraj salary in leo movie : நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் தற்பொழுது வசூல் மன்னனாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார் சமீப காலமாக விஜயின் திரைப்படங்கள் பல கோடி வசூல் செய்து வருகின்றது இந்த நிலையில் விஜய் தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் பல மடங்கு அதிகரித்துள்ளது.

அதற்கு காரணம் லோகேஷ் தான் ஏற்கனவே லோகேஷ் இயக்கிய மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றது அதனால் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் மட்டுமல்லாமல் பிரபலங்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

பாட்ஷா ரீமேக்கில் அஜித் தான் நடிக்க வேண்டும்.. சரியான காரணத்தை சொல்லி அதிரவிட்ட சினிமா பிரபலம்

லியோ திரைப்படத்தில் விஜயுடன் இணைந்து திரிஷா பல வருடங்களுக்கு பிறகு ஒன்று சேர்ந்து நடித்துள்ளார்கள் அதுமட்டுமில்லாமல் சஞ்சய்தத், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி மாஸ்டர், பிரியா ஆனந்த் என மிகப் பெரிய நட்சத்திரபட்டாலும் நடித்துள்ளார்கள் இந்த நிலையில் லியோ திரைப்படத்திற்காக விஜய் நூறு கோடிக்கு மேல் சம்பளம் வாங்கியதாக தகவல் வெளியானது.

அப்படி இருக்கும் நிலையில் அதேபோல் திரிஷாவுக்கு 5 கோடி சம்பளமாக பேசப்பட்டதாக கூறப்படுகிறது இந்த நிலையில் லியோ திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் அவர்கள் ரஜினியுடன் கூட்டணி அமைக்கிறார் இந்த திரைப்படத்திற்கு தற்காலிகமாக தலைவர் 171 என பெயர் வைக்கப்பட்டுள்ளது. லியோ திரைப்படத்திற்காக லோகேஷ் கனகராஜ் அவர்கள் கிட்டத்தட்ட ஒரு வருடமாக உழைத்துள்ளார் அந்த உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் இருக்க வேண்டும் என பலரும் கூறி வருகிறார்கள் அந்த வகையில் லொகேஷ் கனகராஜ் அவர்களுக்கு முப்பது முதல் 35 கோடி வரை சம்பளமாக பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.

செழியன் சந்தோஷத்தில் மண்ணை அள்ளிப் போட்ட மாலினி.! கோபிக்கு அதிர்ச்சி கொடுத்த ராதிகா.!

தொடர் வெற்றிகளை கொடுத்து வரும் லோகேஷ் கனகராஜ் அவர்களின் சம்பளமும் ஒவ்வொரு திரைப்படத்திற்கும் அதிகமாகி கொண்டிருக்கிறது.