பாட்ஷா ரீமேக்கில் அஜித் தான் நடிக்க வேண்டும்.. சரியான காரணத்தை சொல்லி அதிரவிட்ட சினிமா பிரபலம்

Ajith : நடிகர் அஜித்குமார் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். படம் முழுக்க முழுக்க திரில்லர் மற்றும் ஆக்ஷன் கலந்த படமாக உருவாகி வருகிறது இந்த படத்தின் ஷூட்டிங் பொழுது கலை இயக்குனர் மிலன் இயற்கை எழுதியதால் ஷூட்டிங் சற்று தள்ளி உள்ளது.

வெகு விரைவிலேயே ஷூட்டிங் தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. விடாமுயற்சி படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா ஹீரோயின்னாக நடிக்கிறார். மேலும் பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்து வருகின்றனர் இதனைத் தொடர்ந்து  மார்க் ஆண்டனி படத்தை இயக்கி வெற்றி கண்ட ஆதிக் ரவிச்சந்திரன்.

செழியன் சந்தோஷத்தில் மண்ணை அள்ளிப் போட்ட மாலினி.! கோபிக்கு அதிர்ச்சி கொடுத்த ராதிகா.!

அஜித்தின் அடுத்த படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் மாஸ்டர், விக்ரம், லியோ படங்களை இயக்கி உள்ள லோகேஷ் கனகராஜ் சமீபத்திய பேட்டி ஒன்றில் ரஜினியை தொடர்ந்து அடுத்து அஜித்தை வைத்து ஒரு படத்தை இயக்க வேண்டும் என எனக்கும் ஆசை இருக்கிறது என கூறியிருக்கிறார்.

இந்த நிலையில் ரஜினியை வைத்து பல வெற்றி படங்களை கொடுத்த சுரேஷ் கிருஷ்ணா.. சமீபத்திய பேட்டி ஒன்றில் அஜித் குறித்தும் பேசி உள்ளார் அவர் சொன்னது என்னவென்றால் ரஜினியின் பாட்ஷா வெளிவந்து பெரிய வெற்றி பெற்றது இந்த படத்தை ரீமேக் செய்தால் கண்டிப்பாக தல அஜித் தான் நடிக்க வேண்டும் அவர் தான் அதற்கு பொருத்தமாக இருப்பார்.

வர்ற கோபத்துக்கு சூர்யாவை கொன்னுடுவேன்.. கௌதமுக்கு பிளான் போட்டு கொடுத்த சித்ராதேவி – ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோட்

நடித்தால் மட்டுமே பொருந்தும் ஏனென்றால் கேங்ஸ்டர் படங்களில் சிறப்பாக நடிக்க கூடியவர் தான்.. பாட்ஷா படத்திற்கு சரியான ஆள். பாட்ஷா ரீமேக் செய்தால் அஜித் நடித்தால் மட்டுமே சூப்பராக இருக்கும் என இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா கூறி இருக்கிறார்.