40 வயதிலும் ரேஸ் குதிரை போல் ஓடும் திரிஷா.! தாக்கு பிடிக்க முடியாமல் தள்ளாடும் நயன்தாரா..

trisha and nayanthara movie chance : தமிழ் சினிமாவில் வயதாகியும் இன்றளவும் ஜொலித்து வரும் இரண்டு நடிகைகள் என்றால் த்ரிஷா மற்றும் நயன்தாரா தான். அதனாலயே தான் த்ரிஷா இல்லனா நயன்தாரா என சொல்லும் அளவிற்கு இருந்தது. இப்படி இருவரும் போட்டி போட்டு நடித்து தங்களுக்கான இடத்தை பிடித்து வைத்திருக்கின்றனர்.

இப்படி இருவரும் நடித்து வந்த நிலையில் திரிஷா இடையில் காணாமல் போனார். பின்னர் அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு  நயன்தாரா பல திரைப்படங்களில் நடித்து லேடி சூப்பர் ஸ்டார் ஆக வலம் வந்தார்.

கவுண்டமணி பற்றி உண்மையை உடைத்த நடிகை சுகன்யா!! பார்த்தா அப்படி தெரியலையே..

பின்னர் நீண்ட இடைவெளிக்கு பிறகு 96 திரைப்படத்தின் மூலம் திரிஷா ரீ என்ட்ரி கொடுத்து  மொத்த மார்க்கெட்டையும் பிடித்தார். பின்னர் அதனைத் தொடர்ந்து  பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவையாக  நடித்ததன் மூலம் தனது திறமையும் அழகையும் வெளிப்படுத்தி மீண்டும் தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் இடத்தை பிடித்து நயன்தாராவை பின்னுக்கு தள்ளினார்.

மேலும் கடந்த வருடம் விஜயுடன் இணைந்து லியோ திரைப்படத்தில் நடித்திருந்தார். பின்னர் அதனைத் தொடர்ந்து அஜித்துடன் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். அது மட்டுமல்லாமல் கமலுடன் தக் லைப் என்ற திரைப்படத்திலும் நடித்த வருகிறார்.

விஜய்யை தூக்கிவிட்ட துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா.! கைக்கு வந்த வாய்ப்பை நழுவ விட்டுட்டாரே..

தற்போது இப்படி அனைத்து முன்னணி நடிகர்களுடனும்  இணைந்து நடித்து வருகிறார்  திரிஷா. ஆனால் நயன்தாராவோ முன்னணி நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு இல்லாததால் கிடைத்த படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார், அவரது திருமணம் தான் முக்கிய காரணமாக கருதப்படுகிறது . திருமணமாணாலே மார்க்கெட் போய்விடும் என்பது ஒரு பொதுவான கருத்தாகவும் உள்ளது.அது மட்டும் இல்லாமல் பல பிசினஸ்களையும் செய்து வருகிறார்.

இதனாலயே திரிஷா திருமணத்தை பற்றி யோசிக்காமல் தள்ளி வைத்துவிட்டு கிடைக்கின்ற வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்பதற்காக படத்தில் தொடர்ந்து நடிப்பதிலேயே முழுமையான  கவனத்தை செலுத்தி வருகிறாராம்.