ஒரே படத்தில் மூன்று கெட்டபில் நடித்தும் ரசிகர்களை மூட் அவுட் ஆக்காத டாப் 5 நடிகர்கள்.!

Top 5 Triple role movies of tamil cinema: தற்பொழுதெல்லாம் வெளியாகும் பெரும்பாலான திரைப்படங்கள் மொக்கையாக இருந்தால் பாதியிலேயே படத்தை பார்க்காமல் ரசிகர்கள் வருவது வழக்கம் இப்படிப்பட்ட சூழலில் ஒரே படத்தில் மூன்று கெட்டபில் நடித்தும் ரசிகர்களை மூட் அவுட் ஆக்காத டாப் 5 நடிகர்கள்.

5. வரலாறு: 2006ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று திரைப்படம் தான் வரலாறு. இத்திரைப்படத்தில் ஒரு அப்பா அவருக்கு இரண்டு மகன் என மூன்று கெட்டப்பில் அஜித் நடித்து மிரட்டி இருப்பார்.

பில்டப் கொடுத்து தயாரிப்பாளர் தலையில் துண்டு போட வைத்த கார்த்தியின் 5 திரைப்படங்கள்.!

4. மூன்று முகம்: ஜெகநாதன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் 1982ஆம் ஆண்டு வெளியான மூன்று முகம் திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஒரு அப்பா அவருக்கு இரண்டு மகன் என மூன்று கேரக்டரில் நடித்திருப்பார் இப்படத்திற்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

3. மெர்சல்: 2017ஆம் ஆண்டு அட்லி இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால் நடிப்பில் வெளியான மெர்சல் திரைப்படத்தில் ஒரு அப்பா அவருக்கு இரண்டு மகன் என மூன்று கேரக்டரிலும் விஜய் நடித்திருப்பார்.

2. அபூர்வ சகோதரர்கள்: 1989ஆம் ஆண்டு சங்கீதம் சீனிவாச ராவ் இயக்கிய அபூர்வ சகோதரர்கள் படத்தில் கமல்ஹாசன், ஜெய்சங்கர், நாகேஷ், கௌதமி, மனோரமா, ஸ்ரீ வித்யா, டெல்லி கணேஷ், நாசர் என மேலும் ஏராளமான பிரபலங்களை இணைந்து நடித்திருப்பார்கள். இப்படத்திலும் கமல் அவர்கள் அப்பா அவருக்கு இரண்டு மகன் என மூன்று கேரக்டரில் நடித்திருப்பார்.

சினிமாவில் நடித்துக் கொண்டு ஆட்சியை பிடிக்க முயன்ற 11 சினிமா பிரபலங்கள்.! சாதித்துக் காட்டிய எம்ஜிஆர் சரிந்து போன சிவாஜி…

1. அந்நியன்: 2005ஆம் ஆண்டு சங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் தான் அந்நியன். இப்படத்தில் மூன்று கேட்டப்பில் தனது வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த திரையுலகையும் திரும்பி பார்க்க வைத்தார் விக்ரம்.