சினிமாவில் நடித்துக் கொண்டு ஆட்சியை பிடிக்க முயன்ற 11 சினிமா பிரபலங்கள்.! சாதித்துக் காட்டிய எம்ஜிஆர் சரிந்து போன சிவாஜி…

சினிமாவில் ஜொலித்தாலும் அரசியலிலும் ஜொலிக்க வேண்டும் என நடிக்கும் பொழுதே ஆட்சியைப் பிடித்த சினிமா பிரபலங்களையும் ஆட்சியைப் பிடிக்க முயற்சி செய்து தோற்றுப் போன சினிமா பிரபலங்களையும் இங்கே காணலாம்.

எம்ஜிஆர் : 1972 ஆம் ஆண்டு திமுகவிலிருந்து வெளியேறி எம்ஜிஆர் ஒரு சொந்த கட்சியை ஆரம்பித்தார் அதாவது அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து திமுகவுக்கு எதிராக மிகப்பெரிய எதிர்க்கட்சியாக உருமாறினார் பிறகு மூன்று முறை தமிழ்நாட்டின் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சியை கைப்பற்றினார். எம்ஜிஆர் திட்டம் இன்னும் மக்களிடையே பயன்பாட்டில் தான் இருக்கிறது.

ஜெயலலிதா : எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு அதிமுகவை யார் வழிநடத்தி செல்ல போவது என மிகப் பெரிய கேள்விக்குறியாக இருந்தது அதன் பிறகு ஜெயலலிதா அதிமுகவை கைப்பற்றி மாபெரும் கட்சியாக மாற்றி முதலமைச்சராக ஆறு முறை தேர்வு செய்யப்பட்டார்.

இந்தியன் 2 முதல் விடாமுயற்சி வரை 2024 இல் நெட்ப்ளிக்ஸிடம் அடி பணிந்த தமிழ் படங்கள்.!

சிவாஜி கணேசன் : நடிகர் சிவாஜி கணேசன் சினிமாவில் ஜொலித்தாலும் எம்ஜிஆருக்கு போட்டியாக 1988 ஆம் ஆண்டு தமிழக முன்னேற்ற முன்னணி கட்சியை ஆரம்பித்தார் ஆனால் இவரால் பெரிய அளவில் கட்சியை கொண்டு போக முடியவில்லை.

பாக்கியராஜ்: அதேபோல் இயக்குனரும், நடிகரும், திரைக்கதை எழுத்தாளருமான பாக்கியராஜ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அரசியலில் இறங்க வேண்டும் என்ற ஆசையில் எம்ஜிஆர் மக்கள் முன்னேற்ற கழகம் என ஆரம்பித்தார் ஆனால் பெரிய அளவில் அவரால் கொண்டு செல்ல முடியவில்லை.

டி. ராஜேந்திரன் : நடிகர் டி ராஜேந்திரன் சினிமாவில் ஜொலித்தது போல் அரசியலிலும் ஜொலிக்கலாம் என எண்ணி தாயாக மறுமலர்ச்சி கழகம் என ஒரு கட்சியை தொடங்கினார் அதன் பிறகு இலட்சிய திமுக என பெயர் மாற்றமும் செய்தார் ஆனால் இவரால் பெரிய அளவில் கொண்டு செல்ல முடியவில்லை.

உனக்கெல்லாம் வெட்கமே இல்லையா..? மகளுடன் சேர்ந்துகொண்டு ரஜினி செய்த வேலை.! திட்டி தீர்க்கும் நெட்டிசன்ங்கள்..

விஜயகாந்த்: நடிகர் விஜயகாந்த் பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக திகழ்ந்தவர் இவர் நடிகராக இருக்கும் பொழுது மக்களுக்கு பல நலத்திட்டங்களை செய்தவர் இந்த நிலையில் 2005 ஆம் ஆண்டு தேமுதிக என்ற கட்சியை ஆரம்பித்தார் அதனை திறம்பட பெரிய லெவலுக்கு கொண்டு சென்றார். கிட்டத்தட்ட எதிர்க்கட்சி தலைவர் என மிரட்டும் அளவிற்கு மடமடவன உயர்ந்தார். ஆனால் தற்பொழுது இவர் மறைந்து விட்டார் இவர் மறைந்தாலும் இவர் செய்த நல்லது மக்கள் மனதில் இருந்து மறையாது.

சரத்குமார்: நடிகர் சரத்குமார் 2007 ஆம் ஆண்டு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை ஆரம்பித்தார்.

கருணாஸ்: நகைச்சுவை நடிகர் கருணாஸ் 2015 ஆம் ஆண்டு முக்குலத்தோர் புலிப்படை கட்சியை ஆரம்பித்தார் அதன் பிறகு பெரிதாக கொண்டு செல்லவில்லை இவரை தொடர்ந்து 2018 நடிகர் கார்த்தி அவர்கள் மனித உரிமை காக்கும் கட்சியை தொடங்கினார்.

அதேபோல் 2018 ஆம் ஆண்டு கமலஹாசன் மக்கள் நீதி மையம் கட்சி என ஆரம்பித்தார் தற்பொழுது 2024 ஆம் ஆண்டில் நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என தன்னுடைய அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ளார் விஜயகாந்திற்கு  பிறகு விஜய் முன்னேறுவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.