உனக்கெல்லாம் வெட்கமே இல்லையா..? மகளுடன் சேர்ந்துகொண்டு ரஜினி செய்த வேலை.! திட்டி தீர்க்கும் நெட்டிசன்ங்கள்..

Lal Salaam Actress: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் திரைப்படம் தான் லால் சலாம். இந்த படத்தில் மொய்தின் பாய் என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் கௌரவ வேடத்தில் நடித்துள்ளார். மேலும் விக்ராந்த், விஷ்ணு விஷால் இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தினை தமிழகத்தில் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் ரிலீஸ் செய்வதற்கான உரிமையை கைப்பற்றியுள்ளது. கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி இருக்கும் லால் சலாம் படம் வருகின்ற பிப்ரவரி 9ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் இந்த படத்தின் கதாநாயகி தானியா பாலகிருஷ்ணன் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் என தமிழ் சினிமா ரசிகர்கள் விடாப்படியாக உள்ளனர்.

சத்தமே இல்லாமல் நிக்சன் வெளியிட்ட புகைப்படம்.!

அதாவது நடிகை தான்யா பாலகிருஷ்ணன் ஏழாம் அறிவு, காதலில் சொதப்புவது எப்படி, நீதானே எந்தன் பொன்வசந்தம், ராஜா ராணி போன்ற சில தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் வாயை மூடி பேசவும், மாரி போன்ற திரைப்படங்களை இயக்கிய பாலாஜி மோகனை திருமணம் செய்துக் கொண்டார்.

சில வருடங்களுக்கு முன்பு சிஎஸ்கே ஆர்சிபி அணிக்கு இடையே நடந்த ஐபிஎல் போட்டி பற்றி இவர் போட்ட ட்வீட் பெரும் சர்ச்சையை உண்டாக்கியது. அதில் அவர் கூறியதாவது, அன்புள்ள சென்னை வாசிகளே நீங்கள் தண்ணீர் பிச்சை கேட்டீர்கள் தண்ணீர் பிச்சை தந்தோம், நீங்கள் மின்சாரத்தை பிச்சையாக கேட்டீர்கள் மின்சாரத்தையும் பிச்சையாக தந்தோம் ஆனால் உங்கள் மக்கள் இங்கு வந்து அழகான நகரத்தை ஆக்கிரமித்து கொச்சைப் படுத்துகிறார்கள்.

அதே போல் தற்பொழுது சிஎஸ்கே பிளே ஆப்க்கு செல்வதற்காக மறுபடியும் எங்களிடம் பிச்சை  கேட்டுள்ளீர்கள் அந்த பிச்சையையும் உங்களுக்கு தருகிறோம் உங்களுக்கெல்லாம் வெக்கமே இல்லையாடா என மிகவும் கொச்சையாக பேசி இருந்தார். அந்த சமயம் இவரை விமர்சனம் செய்ததால் இதற்கு மேல் தமிழ் திரைப்படங்களிலேயே நடிக்க மாட்டேன் என சபதம் போட்டு இருந்தார்.

முதன் முறையாக தமிழில் “A” சான்றிதழ் வாங்கிய படம் எது தெரியுமா.?

ஆனால் இப்பொழுது கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் லால் சலாம் படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இவ்வாறு இவரை விட வெட்கம் கெட்டவராக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உள்ளார் ஏனென்றால் எத்தனையோ நடிகைகள் இருக்கும் பொழுது நம் தமிழர்களை பிச்சை எடுப்பவர்கள் என கூறியவரை ஹீரோயின் ஆக நடிக்க வைத்திருப்பது சரியா? எனவும் இதற்கு ரஜினிகாந்த்தும் எந்த எதிர்ப்பு தெரிவிக்கவில்லை எனவும் ரசிகர்கள் மிகவும் மோசமாக விமர்சனம் செய்து வருகின்றனர்