முதன் முறையாக தமிழில் “A” சான்றிதழ் வாங்கிய படம் எது தெரியுமா.?

Tamil Movies: தற்பொழுதெல்லாம் வெளியாகும் பல திரைப்படங்களுக்கு ஏ சான்றிதழ் வழங்கப்படுவது வழக்கம் பொதுவாக வன்மங்கள் அதிகமாக இருப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றால் அதற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. அறிமுக நடிகர்களின் படங்கள் என்றால் கையை அறுத்துக் கொள்வதை காட்டி வன்முறை எனக்கூறி அதற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டு வழக்கம்.

இதுவே முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் என்றால் அதில் இருக்கும் ஹீரோ தனது எதிரியை வெட்டி கொன்றால் கூட அதற்கு ஏ சான்றிதழ் வழங்கப்படுவது கிடையாது. ஏ சான்றிதழ் என்பது 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பார்க்க வேண்டும் குழந்தைகள் பார்க்க கூடாது அவர்களுடைய எண்ணத்தில் மாறுபாடுகள் இருக்கும் என்பதனால் இந்த நடைமுறையில் இருந்து வருகிறது.

கலை கட்டிய ரோபோ சங்கர் வீடு.. இந்திராஜாவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது வைரலாகும் புகைப்படங்கள்..

இவ்வாறு படங்களுக்கு ஏற்றார் போல் சான்றிதழ்களை வழங்க தணிக்கை குழு செயல்பட்டு வருகிறது. அப்படி முதன் முதலில் தமிழ் சினிமாவில் சான்றிதழ் வழங்கப்பட்ட திரைப்படம் தான் மர்மயோகி. இத்திரைப்படம் 1951ஆம் ஆண்டு ஜூபிடர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியானது. படத்தின் கதையின்படி, நாயகனின் தந்தை இறந்து விடுகிறார்.

அவர் அடிக்கடி கொடுமைக்காரரா ராணியின் முன்னால் பேயாக வந்து அவளை பயமுறுத்துவார் இறுதியில் அவர் உண்மையான மனிதர் தான் இவர் பேய் என சொல்லப்படுவது பொய் என்பது தெரிய வருகிறது. இதனை பார்த்த தணிக்கை குழு அதிகாரிகள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

எனவே குழந்தைகள் இதனை பார்த்தால் என்ன ஆவது எனக்கூறி ஏ சான்றிதழை அளித்துள்ளார்கள். படம் வெளியானதற்கு பின்னால் அரசியல் இருக்கும் என பேசப்பட்டது ஏனென்றால் எம்.ஜி ராமச்சந்திரன் ஹீரோவாக நடிக்க, ராஜகுமாரி பட கதையை எழுதிய ஏ.எஸ்.ஏ சாமி கதை தான் மர்மயோகி.

அர்ஜுனுக்கு முன்பே மூன்று டாப் ஹீரோக்கள் முதல்வன் திரைப்படத்தை நிராகரித்துள்ளார்களா.? அட லிஸ்டில் இவரும் இருக்கிறாரா.

மர்மயோகி படத்தின் ஆரம்பக் காட்சியில் எம் .ஜி ராமச்சந்திரன் கருப்பு உடை அணிந்து கருப்பு குதிரையின் மீது வருவார் இந்த கருப்பு உடைக்காக திரையரகே விசில் சத்தத்தில் நிறைந்தது. எனவே அரசியல் சார்பு காரணமாகவும் தணிக்கைக்குழு மர்மயோகி படத்திற்கு ஏ சான்றிதழை தந்துள்ளது.