அர்ஜுனுக்கு முன்பே மூன்று டாப் ஹீரோக்கள் முதல்வன் திரைப்படத்தை நிராகரித்துள்ளார்களா.? அட லிஸ்டில் இவரும் இருக்கிறாரா.

Director Shankar: பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியாகும் பல படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் தற்போது இந்தியன் 2 திரைப்படத்தினை கமல்ஹாசனை வைத்து இயக்கி வருகிறார். இந்த படத்திற்காக ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் 1999ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் முதல்வன் இத்திரைப்படத்தில் அர்ஜுன் ஹீரோவாக நடித்திருந்த நிலையில் இவருக்கு முன்பு மூன்று நடிகர்களை அணுகியுள்ளார். ஆனால் அந்த நடிகர்கள் நடிக்க மறுத்ததால் கடைசியாக அர்ஜுனை நடிக்க வைத்துள்ளார் சங்கர்.

அட விஜய்க்கு மெகா ஹிட் அடித்த இந்த திரைப்படங்கள் அனைத்தும் ரீமேக் திரைப்படங்கள்.! இன்று வரை மறக்க முடியாத காதலுக்கு மரியாதை..

தரமான கதை அம்சத்துடன் வெற்றி திரைப்படங்களை இயக்கி வரும் ஷங்கர் அர்ஜுனை வைத்து முதல்வன் என்ற மாபெரும் சூப்பர் ஹிட் படத்தினை கொடுத்தார். இப்படத்தில் மனிஷா கொய்ராலா, ஹீரோயினாக நடிக்க ரகுவரன், மணிவண்ணன், வடிவேலு, லைலா உள்ளிட்டோர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

மேலும் ஏ.ஆர் ரகுமான் இசையமைக்க கே.வி ஆனந்த் படத்தொகுப்பு செய்திருந்தார். அர்ஜுனின் திரை வாழ்க்கையில் மிக முக்கியமான படமாக முதல்வன் படம் அமைந்தது. இயக்குனர் சங்கர் முதலில் அரசியல் கதைகளத்துடன் உருவான முதல்வன் படத்தின் கதையை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை மனதில் வைத்து தான் எழுதி உள்ளார்.

ஆனால் சில காரணங்களினால் ரஜினி இப்படத்தில் நடிக்க மறுத்துள்ளார் இதனை அடுத்து தளபதி விஜய்யை இப்படத்தில் ஹீரோவாக நடிக்க வைக்க இயக்க முடிவு செய்தாராம். விஜய்யின் தந்தையான எஸ்.ஏ சந்திரசேகரை அணுக இவர்களுக்கிடையே பேச்சுவார்த்தை நடைபெற ஆனால் ஒத்துப் போகவில்லை என்பதால் தன் மகன் விஜய்க்கு கிடைத்த முதல்வன் படத்தின் வாய்ப்பை வேண்டாம் என நிராகரித்தாராம்.

குறைவான பட்ஜெட்டில் உருவாகி கோடியில் லாபம் பார்த்த விஜய் சேதுபதியின் ஐந்து திரைப்படங்கள்.!

விஜய்யை தொடர்ந்து நடிகர் கமலஹாசனை அணுகியுள்ளார் ஷங்கர். அந்த சமயத்தில் கமல் ஹேராம் படத்தை இயக்கி, நடித்து வந்ததால் அவரால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போய் உள்ளது. அதன் பிறகு ஜென்டில்மேன் படத்தின் ஹீரோ அர்ஜுனை சந்தித்து கதையை கூற அர்ஜுனுக்கு இந்த கதை மிகவும் பிடித்துப் போனதால் பிறகு இவர்களுடைய கூட்டணியில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது முதல்வன் திரைப்படம்.