அட விஜய்க்கு மெகா ஹிட் அடித்த இந்த திரைப்படங்கள் அனைத்தும் ரீமேக் திரைப்படங்கள்.! இன்று வரை மறக்க முடியாத காதலுக்கு மரியாதை..

Thalapathy Vijay Top 5 Super Hit Remake Movies: தளபதி விஜய் நடிப்பில் வெளியாகும் அனைத்து திரைப்படங்களுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் விஜய் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றியினைப் பெற்ற டாப் 5 ரீமேக் திரைப்படங்கள்.

பத்ரி: 2001ஆம் ஆண்டு ஏ.அருண் பிரசாந்த் இயக்கத்தில் விஜய், பூமிகா கௌலா, விவேக், ரியாஸ் கான் போன்றவர்கள் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் தான் பத்ரி. இப்படம் 1999ஆம் ஆண்டு தெலுங்கில் தம்முடு என்ற பெயரில் ரிலீஸான இப்படம் பத்ரி என்ற பெயரில் தமிழில் ரிலீஸ் ஆனது.

ஒருவேளை பிச்சைக்காரன் 3 பாகமா.? தனுஷின் புதிய லுக்கை பார்த்து அதிர்ச்சியாகவும் ரசிகர்கள்.!

வசீகரா: 2003ஆம் ஆண்டு கே செல்வபாரதி இயக்கத்தில் விஜய், சினேகா இணைந்து நடித்த வசீகரா திரைப்படம் 2000ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான நூவு நாக்கு நச்சுவ் என்ற படத்தின் ரீமேக் தான் வசீகரா.

நினைத்தேன் வந்தாய்: 1996ஆம் ஆண்டு பெல்லி சண்டடி என்ற தெலுங்கு திரைப்படம் ரிலீஸ் ஆகியுள்ளது இந்த படத்தின் ரீமேக் தான் 1998ஆம் ஆண்டு விஜய், ரம்பா, தேவயானி நடிப்பில் வெளியான நினைத்தேன் வந்தாய்.

பிரியமானவளே: பவித்ர பந்தம் என்ற தெலுங்கு திரைப்படத்தின் ரீமேக் தான் 2000ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான பிரியமானவளே. இப்படத்தை செல்வபாரதி இயக்க விஜய்யுடன் இணைந்து சிம்ரன் நடித்திருந்தார்.

மொத்த உண்மையையும் சொல்ல வந்த முத்து.! நெஞ்சு வலி வந்தது போல் நடித்து சொல்லவிடாமல் தடுத்த அண்ணாமலை.! பரபரப்பின் உச்சத்தில் சிறகடிக்க ஆசை.

காதலுக்கு மரியாதை: 1997ஆம் ஆண்டு விஜய் ஷாலினி இணைந்து நடித்த காதலுக்கு மரியாதை திரைப்படம் 97ல் வெளியான அணியாதி பிரபு என்ற மலையாள படத்தின் ரீமேக் ஆகும். காதலுக்கு மரியாதை திரைப்படம் தான் விஜய்யின் சினிமா வாழ்க்கைக்கு திருப்புமுனையாக அமைந்தது.