மொத்த உண்மையையும் சொல்ல வந்த முத்து.! நெஞ்சு வலி வந்தது போல் நடித்து சொல்லவிடாமல் தடுத்த அண்ணாமலை.! பரபரப்பின் உச்சத்தில் சிறகடிக்க ஆசை.

siragadikka aasai : சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் ட்ரூத் டேர் விளையாட்டை விளையாடுகிறார்கள் அப்பொழுது முதலில் ரவியிடம் சுருதி முதலில் விளையாட ஆரம்பிக்கிறார்கள் அப்பொழுது ரவி நீ உண்மைய தான் சொல்லணும் எனக்கு முன்னாடி நீ வேற யாரையாவது காதலிச்சுருக்கியா என கேள்வி கேட்கிறார் அதற்கு ரவி முழித்துக் கொண்டே இருக்கிறார் அப்பொழுது பரவால்ல சொல்லு நான் எதுவும் சொல்ல மாட்டேன் என சொன்னதும் ஸ்கூல் லைப்ல அட்ராக்சன் இருந்தது எனக் கூறுகிறார்.

உடனே ஸ்ருதி இரு இரு இது வேற நடந்துச்சா நான் தனியாக கவனித்துக் கொள்கிறேன் என பேசுகிறேன் அடுத்ததாக ரவி மனோஜ் அவர்களிடம் ட்ரு டேர் என கேட்க டேர்  என கூறுகிறார் உடனே ரவி 10 புல்லப்ஸ் எடு என பேசுகிறார் உடனே மனோஜ் புல்லப்ஸ் எடுக்கிறார். அடுத்தது மனோஜ் ஸ்ருதியிடம் இதுவரைக்கும் யாருக்கும் தெரியாத ஒரு ரகசியத்தை சொல்லு என கேட்க உடனே சுருதி நாங்க வீட்டுக்கு வரும்போது ஃபர்ஸ்ட் நைட்டுக்கு ரெடி பண்ணுநிங்களே அது எங்களுக்கு ஃபர்ஸ்ட் நைட்டே கிடையாது அதுக்கு முன்னாடியே எங்களுக்கு எல்லாம் முடிஞ்சிடுச்சி என கூறுகிறார்.

இதனால் மொத்த குடும்பமும் ஆத்தா நீ ஒண்ணுமே சொல்ல வேண்டாம் என பேசுகிறார்கள் உடனே ரோகினி இடம் சுருதி கடைசியா நீங்க எப்ப பொய் சொன்னீங்க என கேட்கிறார் ரவியும் அதையே கேட்க அதிர்ச்சி அடைகிறார் ரோகிணி. உடனே பதில் சொல்லாமல் சில நேரங்களில் சில இடத்தில் பொய் சொல்ல வேண்டியது இருக்கும் அது நல்லதில் தான் முடியும் அதேபோல் சில நேரத்தில் உண்மையும் இருக்கும் என ஏதேதோ சொல்லி மழுப்ப மீனா கடைசியா எப்ப பொய் சொன்னீங்கன்னு தானே கேட்டாங்க வேற ஏதோ பேசுறீங்க என கூறுகிறார்.

அடுத்த காட்சியில் மீனாவிடம் கேள்வி கேட்கிறார்கள் அப்பொழுது உன்னுடைய ஆசை என்ன என கேட்க அதற்கு மீனா என் தம்பி நல்லா நிலைமைக்கு வரணும் எங்க வீட்ட பார்த்துக்கணும் தங்கச்சிக்கு சீக்கிரம் நல்ல வேலை கிடைக்கணும் நல்ல வரன் கிடைக்கணும் அதுதான் எனக்கு வேண்டும் உன்னுடைய ஆசை என்ன எனக் கேட்டோம் என அண்ணாமலை கூற எனக்கு என்ன பெரிய ஆசை இருக்கு என்பது போல் பேசுகிறார்.

அடுத்ததாக முத்துவிடம் பாட்டி கேட்க அதற்கு முத்து ஒரு கதை சொல்ல ஆரம்பிக்கிறார் அப்பொழுது அனைவரும் கண்களும் கலங்குகிறது எனக்கு எங்க அம்மா இந்த பொங்கல் பண்டிகையின் பொழுது தான் இங்க விட்டுட்டு போனாங்க நான் என்ன தப்பு செஞ்சேன் இங்க விட்டுட்டு போற அளவுக்கு எங்க அம்மா எப்ப வருவாங்க வருவாங்க நான் காத்துக்கிட்டே இருப்பேன்.

ஒருமுறை நான் கீழே விழுந்துட்டேன் அப்படியே எங்க அம்மா ஓடிவந்து எல்லாத்தையும் தட்டி விட்டு ஸ்கூலுக்கு தூக்கிக் கொண்டு விட்டாங்க. அதேபோல் ஸ்கூல்ல ஒரு பையன் என்னை அடிச்சிட்டான் உடனே எங்க அம்மா வந்து அந்த பையன கன்னத்திலேயே ஓங்கி ஒரு அரை விட்டாங்க அப்புறம் சாப்பாடு எடுக்காம போனாப்ப கூட எங்க அம்மா வந்து ஊட்டி விட்டு போவாங்க என தன்னுடைய ஆதங்கத்தை முத்து சொல்ல சொல்ல அனைவரின் கண்களும் கலங்குகிறது.

இதுவரைக்கும் என் மனதிலேயே பூட்டி வைத்திருந்த உண்மை நான் இன்னைக்கு சொல்லப் போறேன் என கூற மனோஜ் முழிக்கிறார் எங்கு நம்மள பத்தி தான் சொல்ல போறானோ என பதட்டத்தில் இருக்கிறார் அந்த சமயத்தில் அண்ணாமலை நெஞ்சுவலி வந்தது போல் நடித்து உண்மையை சொல்லாத என சைகையால் கூற முத்து எழுந்து வெளியே செல்கிறார்.

முத்து சென்றவுடன் இன்னைக்கு முத்து உண்மையை சொல்லி இருந்தா எல்லாரோட சந்தோஷமும் போய் இருக்கும் சில உண்மை தெரியாமல் இருப்பது நல்லது தான் ஆனால் முத்து மனசுல இவ்வளவு கஷ்டம் இருக்குன்னு யாருக்குமே தெரியாது. அவன் பாசத்துக்காக எவ்வளவு ஏங்கி இருக்கான் தெரியுதா என விஜயாவிடம் கூறுகிறார் அண்ணாமலை.

அடுத்த காட்சியில் முத்துவிடம் மீனா பேசிக் கொண்டிருக்கும் பொழுது அப்படி நீங்க என்ன சொல்ல வந்தீங்க என கேட்க உங்க மனசுல அம்மா மீது அவ்வளவு பாசம் இருக்கா என பேசுகிறார் அம்மா என்றால் யாருக்கு தான் பிடிக்காது ஆனா எனக்கு தான் அந்த கொடுப்பனையே கிடையாது அம்மா இருந்தும் எனக்கு பாசமே கிடைக்கலை என்பது போல் பேசுகிறார்.

அடுத்த நாள் அனைவரும் சென்னைக்கு வந்து விடுகிறார்கள் அப்பொழுது முத்து மீனா விடம் கடையை திற நிறைய கஸ்டமர் வருவாங்க என பேச ஆமா பொல்லாத கஸ்டமர் என விஜய் கிண்டல் அடிக்கிறார் பிறகு வீட்டிற்கு சென்றவுடன் யார் யாரோ ஏதோ சொன்னாங்க ரோகிணியின் மாமா மனோஜ்க்கு பிரேஸ்லெட் கொடுத்தார் பாத்தீங்களா அதுதான் சந்தோஷமா இருக்கு என பேசுகிறார்.

சில பேர் நாக்கு மேல பள்ளு படுறது மாதிரி பேசுனாங்க அவங்களுக்கெல்லாம் நல்ல பதில் கொடுத்தது மாதிரி இருந்துச்சு என கூறுகிறார் உடனே முத்து அந்த சில பேர் நான் தான் வேற யாரும் கிடையாது என முத்து பேசுகிறார் ரோகிணியும் மனோஜம் முத்துவை பார்க்கிறார்கள் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.