கலை கட்டிய ரோபோ சங்கர் வீடு.. இந்திராஜாவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது வைரலாகும் புகைப்படங்கள்..

Indraja Engagement Photos: காமெடி நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவுக்கு அவருடைய மாமா கார்த்திக்கும் இன்று பிரம்மாண்டமாக நிச்சயதார்த்தம் நிறைவடைந்து இருக்கும் நிலையில் அது குறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது. விஜயகாந்தின் தர்மசக்கரம், படையப்பா போன்ற திரைப்படங்களில் கூட்டங்களில் ஒருவராக நடித்து வந்த ரோபோ சங்கர் ஒரு கட்டத்தில் தனது காமெடி திறமையை வைத்து விஜய் டிவியின் அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

மேலும் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பட்டுத்தொட்டி எங்கும் பிரபலமான இவருக்கு முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் குறிப்பிட்ட கதாபாத்திரத்தின் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தது. அப்படி ஏய், தீபாவளி, இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, கப்பல் போன்ற திரைப்படங்களில் காமெடியனாக சிறிய ரோலில் நடித்து வந்த இவர் தனுஷ்டன் மாரி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.

அர்ஜுனுக்கு முன்பே மூன்று டாப் ஹீரோக்கள் முதல்வன் திரைப்படத்தை நிராகரித்துள்ளார்களா.? அட லிஸ்டில் இவரும் இருக்கிறாரா.

தற்பொழுது தொடர்ந்து ஏராளமான முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவருடைய மனைவி பிரியங்காவும் விஜய் டிவியின் காமெடி ஷோக்களில் பங்கு பெற்று வருகிறார். இவர்களைப் போலவே இவர்களின் மகள் இந்துரஜாவும் சில திரைப்படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் ஷோக்களிலும் பங்குப்பெற்று வருகிறார்.

Indraja Engagement Photos
Indraja Engagement Photos

இந்நிலையில் கடந்தாண்டு ரோபோ சங்கரின் மகள் இந்துஜாவுக்கு அவருடைய தாய் மாமன் கார்த்திக் என்பவருக்கும் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக கூறப்பட்டது. இதனை குடும்பத்தினர்களும் உறுதியாக தெரிவித்த நிலையில் இன்று அவர்களின் இல்லத்தில் எளிமையான முறையில் திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்ற முடிந்துள்ளது.

புட்டி பால் குடிக்கும் வயதில் இருந்து நடிக்கும் சிம்பு.. மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.!

இந்த நிகழ்ச்சியில் நெருங்கிய உறவினர்கள் நண்பர்கள் மட்டுமே பங்கு பெற்றுள்ளனர். இவ்வாறு இவர்களுடைய நிச்சயதார்த்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

Indraja Engagement Photos
Indraja Engagement Photos
Indraja Engagement Photos
Indraja Engagement Photos
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்