புட்டி பால் குடிக்கும் வயதில் இருந்து நடிக்கும் சிம்பு.. மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.

Actor Simbu Net worth: குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்கு அறிமுகமாகி நடிகர், பாடகர், இயக்குனர் என பன்முக திறமைகளை கொண்டு விளங்கும் நடிகர் சிம்புவின் மொத்த சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இன்று சிம்பு தனது 41வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

இயக்குனர் நடிகருமான டி ராஜேந்திரன்-உஷா தம்பதியினருக்கு மகனாக பிறந்த  சிலம்பரசன் தனது அப்பாவின் இயக்கத்தில் 1984ஆம் ஆண்டு வெளியான உறவை காத்த கிளி என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இப்படத்தில் சிம்பு நடிக்கும் பொழுது அவருக்கு ஒரு வயது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து டி ராஜேந்திரன் இயக்கி மைதிலி என்னை காதலி, ஒரு தாயின் சபதம், என் தங்கை கல்யாணி, சம்சார சங்கீதம், ஒரு வசந்த கீதம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார்.

ரோகிணியின் வண்டவாளத்தை படம் போட்டு காட்டிய முத்து.! அண்ணாமலை எடுத்த அதிரடி முடிவு.! மீண்டும் அசிங்கப்பட்டு சாப்பிடாமல் சென்ற மனோஜ்..

ஒரு கட்டத்தில் 2002ஆம் ஆண்டு தான் இயக்கிய காதல் அழிவதில்லை திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தம், குத்து, கோவில், மன்மதன், தொட்டி ஜெயா, சரவணா, வல்லவன், சிலம்பாட்டம், விண்ணைத்தாண்டி வருவாயா உள்ளிட்ட அடுத்த அடுத்த சூப்பர் ஹிட் திரைப்படங்களை தந்து வந்த சிம்பு சினிமாவில் தனக்கான ஒரு அந்தஸ்தை பிடித்தார்.

இவ்வாறு சினிமாவில் ஜொலித்து வந்த காலகட்டத்தில் சில தோல்வி படங்களும் அமைந்ததால் மேலும் பல சர்ச்சைகளிலும் சிக்கினார். எனவே இதனால் சில ஆண்டுகள் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வந்த சிம்பு மாநாடு, வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் தற்பொழுது மீண்டும் தான் இழந்த மார்க்கெட்டை மீண்டும் பெற்றுள்ளார்.

ரோகிணியின் வண்டவாளத்தை படம் போட்டு காட்டிய முத்து.! அண்ணாமலை எடுத்த அதிரடி முடிவு.! மீண்டும் அசிங்கப்பட்டு சாப்பிடாமல் சென்ற மனோஜ்..

முன்னணி நடிகரான சிம்பு தற்போது தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசன் ராஜ்கமல் ப்ளீஸ் நிறுவனம் தயாரித்து வரும் தனது 48வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. சிம்பு ஒரு படத்தில் நடிப்பதற்காக மொத்தம் ரூபாய் 20 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார்.

ஒரு வயதிலிருந்து நடித்துவரும் இவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூபாய் 150 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. ஆடம்பர கார்கள், பங்களா என பல சொத்துக்களை சேர்த்து வைத்திருக்கும் சிம்பு பல சர்ச்சைகள் நெகட்டிவ் விமர்சனங்களுக்கு பிறகு மீண்டும் ஹீரோவாக ஜொலித்து வருகிறார்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்