ரோகிணியின் வண்டவாளத்தை படம் போட்டு காட்டிய முத்து.! அண்ணாமலை எடுத்த அதிரடி முடிவு.! மீண்டும் அசிங்கப்பட்டு சாப்பிடாமல் சென்ற மனோஜ்..

siragadikka aasai : சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் ஒரு லேடி கார் ரிப்பேர் என்பதால் முத்துவின் காரில் சவாரிக்கு வருகிறார். அப்பொழுது அவர் பார்லருக்கு போக சொல்கிறார் அழகு நிலையத்தில் இறக்கி விட்டவுடன் காசு கொடுக்காமல் போய்விடுகிறார் உடனே முத்து காசை வாங்க அழகு நிலையத்திற்கு செல்கிறார் அப்பொழுது காசு கொடுக்க மறந்துட்டீங்க என சொன்னதும் பெண் ஊழியரிடம் காசை கொடுங்கள் என கூறி விடுகிறார்.

ரோகிணியிடம் அந்த லேடி த்ரெட்டிங் செய்ய கேட்கிறார் அப்பொழுது ரோகினி அவங்க முடிச்சதும் நீங்க பண்ணிக்கலாமா மேடம் என்ன சொன்னதும் ஏன் நீயே நல்லா தானே பண்ணுவ நீயே பண்ணி விடு என கூறி விடுகிறார். முத்துவுக்கு காசு கொடுக்கும் பெண்ணிடம் இவங்க யாரு இந்த கடை ஏற்கனவே விஜயா வேர்ல்ட் அழகு நிலையம் தானே இருந்தது இப்ப என்ன பேரு மாதிரி இருக்கு என கேட்க. ரோகிணி மேடம் இந்த கடையை அவங்க கிட்ட கொடுத்துட்டாங்க அவங்க பார்லர்ல ஒரு பார்லர் தான் இது.

தமிழக வெற்றி கழகம் என்ற கட்சி பெயருக்கு பின்னால் இருக்கும் ரகசியம் என்ன தெரியுமா.?

ரோகிணி என்ன மாதிரி ஒரு சாதாரண வேலைக்கார பெண் தான் இங்கே என அனைத்து உண்மையும் கூறிவிடுகிறார், முத்து உடனே வீடியோ எடுத்துக் கொண்டு இதனை உடனே சொல்லியாக வேண்டும் என வீட்டிற்கு கிளம்புகிறார் வீட்டிற்கு சென்ற முத்து அண்ணாமலை இடம் ரகசியம் சொல்வது போல் ரோகினி பார்லரை விற்று விட்டார் அவர் அங்கு சாதாரண வேலை செய்யும் பெண் தான் என கூறிவிடுகிறார்.

உடனே இதைக் கூப்பிட்டு கேளுங்க என கேட்க அதெல்லாம் வேணாம் டா இது ஏற்கனவே எல்லாருக்கும் தெரிஞ்சாலும் தெரிஞ்சிருக்கும் இதை சொல்றதால நமக்கு என்ன யூஸ் என பேசிக் கொண்டிருக்கிறார் நீயும் சொல்லக்கூடாது என முத்துவை கட்டி போடுகிறார் அந்த நேரத்தில் ரோகிணி வருகிறார் ரோகினிடம் விஜயா ஜூஸ் குடிக்கிறியா போட்டு வச்சிருக்கேன் போய் குடி என பேசுகிறார்.

ஐயையோ கமலா முத்த காட்சிக்கு பயந்து ஓடிய 4 நடிகைகள்.! லிஸ்டில் இடம் பிடித்த நயன்தாரா…

அடுத்த காட்சியில் அடுத்த நாள் முத்து அதிகாலையில் கிச்சனில் உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டு இருக்கிறார் அப்பொழுது அண்ணாமலை வர நீங்க சாப்டீங்களா அப்பா என கேட்கிறார் நான் சாப்பிட்டேன் டா நீ சாப்பிடு என பேசுகிறார். நானே அஞ்சு தோசை சாப்பிட்டேன் அப்பா என முத்து கூற நீ வேலைக்கு போற அதனால சாப்பிடு அப்பதான் தெம்பு இருக்கும் என்று பேசுகிறார்.

உடனே விஜயா வந்து என்ன கிச்சன்ல உட்கார்ந்து சாப்பிடுற இவனுக்கு மட்டும் ஸ்பெஷலா ஏதாவது செஞ்சு தரியா என பேசுகிறார் அவர் என்கிட்ட பேசிகிட்டே சாப்பிடறாரு என கூறுகிறார் மீனா உடனே இன்னொரு தோசை கொடுப்பதற்கு முத்து வேணாம் வேணாம் அப்புறம் நீ ஏதாவது எனக்கு ஸ்பெஷலா செஞ்சு தந்தேன் உன்னை திட்டுவாங்க என பேசிவிட்டு வெளியே செல்கிறார்.

வெளியே சென்றவுடன் அயன் மேன் துணிகளை கொடுத்து விட்டு 350 காசு கேட்கிறார். அதற்கு முத்து இந்த வீட்ல யாரும் அயன் பண்ண கொடுக்க மாட்டாங்களே என பேச அப்பா நீங்க எதாவது அயன் பண்ண கொடுத்தீங்களா என கேட்கிறார் அதேபோல் மீனாவிடம்  கொடுத்தியா என கேட்க இங்கு யாரும் கொடுக்கவில்லை என தெரிந்தவுடன் அப்போ இதை யார் கொடுத்திருப்பாங்கன்னு தெரியும் என மனோஜை பார்க்கிறார்.

சம்பளத்தை அதிகரிக்க RJ பாலாஜி செய்யும் பித்தலாட்டம்..! ஆத்தாடி அஞ்சு மடங்கு நஷ்டமா..

எதுக்குடா அப்படி பாக்குற நான் தான் கொடுத்தேன் என மனோஜ் வெரைப்பாக பேச வேலையே இல்ல பார்க்கில் போய் உட்கார்ந்து இருக்க அயன் பண்ணி தான் உட்காரணுமா. அப்போ காச நீயே கொடு என சொல்லி அசிங்கப்படுத்துகிறார். ஸ்கூல்ல கொஞ்ச நாள் பெஞ்ச் தேச்சேன் காலேஜ்லையும் பெஞ்ச தேச்சா இப்ப பார்க்கில் தேய்த்துக்கொண்டு இருக்கிற என பேசிக் கொண்டிருக்கும் பொழுது எனக்கு ஒரு ஐடியா இருக்கிறது எனக் கூறி பேசாம அயன் கடை வச்சிடு சரியான லாபம் ஒரு ஆளுக்கு 350 வேணும்னா பத்து குடும்பம் புடிச்சா 3500.

ஒரு மாசத்துக்கு ஒரு லட்ச ரூபாய்க்கு மேல கிடைக்குது பூக்கடைக்கு பக்கத்திலேயே அயன் கடையில் போட்டு விடுவோம் அதையும் அம்மா பேர்லையே வச்சிடு என பேசுகிறார் இதனால் மனோஜ்க்கு அசிங்கமாக தெரிகிறது. இதனால் மனோஜ் சாப்பிட சொன்னதற்கு  சாப்பாடு வேண்டாம் என சோகமாக வெளியே செல்கிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்