சம்பளத்தை அதிகரிக்க RJ பாலாஜி செய்யும் பித்தலாட்டம்..! ஆத்தாடி அஞ்சு மடங்கு நஷ்டமா..

80,90களில் குறிப்பிட்ட முன்னணி இயக்குனர்களின் திரைப்படங்களில் நடிப்பதற்கு நடிகர்கள் போட்டி போடுவார்கள் ஆனால் தற்போது எல்லாம் சினிமாவில் சின்ன பட்ஜெட்டில் நல்ல கதை கொண்ட படமாக இருந்தாலும் புதிய இயக்குனராக இருந்தால் கூட  அதில் நடிக்க நடிகர்கள் தாமாகவே முன் வந்து நிற்கின்றனர்.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியான திரைப்படம் நடிகர் அசோக்செல்வனின் ப்ளூ ஸ்டார் மற்றும் ஆர் ஜே பாலாஜி நடிப்பில் சிங்கப்பூர் சலூன் இந்த இரண்டு படங்களும் தியேட்டரில் ரிலீஸ் ஆனது.

ப்ளூ ஸ்டாரில்  உந்தன் கை வீசிடும் போய் ஜாடை என்னை என்ற பாடல் ரசிகர்களிடையே மிக வேகமாக பரவியது. இந்தப் பாடலுக்காகவே இந்த படம் ஹிட் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது. மேலும் இந்த இரண்டு திரைப்படங்களிலும் எந்த திரைப்படம் வெற்றி பெற்றது என்று பார்த்தால் ஆர் ஜே பாலாஜியின் சிங்கப்பூர் சலூனைவிட ப்ளூ ஸ்டார் ஓரளவுக்கு ஓடியது. மேலும் ப்ளூ ஸ்டார் திரைப்படத்தை எடுக்க ஏழு கோடி செலவாகிதாகவும், சிங்கப்பூர் சலூன் திரைப்படத்தை எடுக்க 23 கோடி செலவாகியதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த இரண்டு திரைப்படமும்  வெளிவந்து ஒரு வாரம் ஆகியும் போட்ட பணத்தை கூட எடுக்காமல் தவிக்கிறது. ப்ளூ ஸ்டார் திரைப்படம் போட்ட பணத்தையே  இன்னும் எடுக்கவில்லையாம் அதேபோல சிங்கப்பூர் சலூன் திரைப்படம் 15 கோடி வசூலை தாண்ட வில்லையாம். மேலும் இந்த திரைப்படம் ஐந்து மடங்கு நஷ்டமாகியும் உள்ளதாம்.

ஆனால் இந்த இரண்டு திரைப்படத்தின் நடிகர்களும் சக்சஸ் மீட் வைத்து கொண்டாடுகின்றனர். அதற்குக் காரணம் இவர்கள் நடித்த திரைப்படம் நன்றாக ஓடியது என்று காண்பித்துக் கொண்டால்தான்  இவர்களது அடுத்த திரைப்படத்தில்  இவர்களுக்கு சம்பளத்தை ஏத்தி கேட்க முடியும் என்பதற்காகவே இப்படி தாமாகவே சக்சஸ் மீட் வைத்து கொண்டாடுவதாக பேசப்படுகிறது.

அதாவது கடந்த ஆண்டு வெளிவந்த மணிகண்டனின் குட் நைட் மற்றும் பிரதீப் ரங்கநாதனின் லவ் டுடே போன்ற திரைப்படங்கள் குறைந்த செலவில் எடுக்கப்பட்டு மிகப்பெரிய அளவில் ஹிட்டானது. இந்த திரைப்படங்கள் ரசிகைகளிடையே நல்ல வரவேற்பை பெற்று கொண்டாடப்பட்டது.

இது போல நல்ல திரைப்படங்கள் என்றால் ரசிகர்களே கொண்டாடுவார்கள். நாமே சக்சஸ் மீட் வைத்து வெற்றி பெற்றது போல் டிராமா போட்டு கொண்டாட வேண்டிய அவசியம் இல்லை என பத்திரிக்கையாளர் பிஸ்மி கூறியுள்ளார்.