ஐயையோ கமலா முத்த காட்சிக்கு பயந்து ஓடிய 4 நடிகைகள்.! லிஸ்டில் இடம் பிடித்த நயன்தாரா…

Kamal Haasan: உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகும் அனைத்து திரைப்படங்களிலும் ஒரு முத்த காட்சியாவது இருப்பது வழக்கம் எனவே இதனை அறிந்த நான்கு நடிகைகள் கமலஹாசன் உடன் நடித்தால் முத்தக்காட்சி நடிக்க வேண்டும் என தெறித்து ஓடி உள்ளனர்.

நயன்தாரா: லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் கடந்த 20 வருடங்களாக கோலிவுட்டில் முன்னணி நடிகையாக கலக்கி வரும் இவர் ரஜினிகாந்த், விஜய், அஜித், சிம்பு என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். கமலுடன் மட்டும் ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை கமலுடன் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்த போதிலும் ரொமான்ஸ் சீன்களில் நடித்தால் முத்தக்காட்சி கண்டிப்பாக இடம் பெறும் அது தனக்கு செட்டாகாது என மறுத்துள்ளார்.

அட விஜய்க்கு மெகா ஹிட் அடித்த இந்த திரைப்படங்கள் அனைத்தும் ரீமேக் திரைப்படங்கள்.! இன்று வரை மறக்க முடியாத காதலுக்கு மரியாதை..

கனகா: கரகாட்டக்காரன் படத்தின் மூலம் பிரபலமான இவர் 90 காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தார். இந்த சமயத்திலே இவருக்கு பல முன்னணி நடிகர்களுடன் நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைத்துள்ளது. அப்படி கமலுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் கமலின் முத்த காட்சிக்கு பயந்தே நிராகரித்துள்ளார்.

நதியா: தமிழ், மலையாளம், தெலுங்கு என பல தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்து வந்த நதியா தமிழில் மிகவும் குறைவான படங்களிலேயே நடித்துள்ளார். அப்படி கமலுடன் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது ஆனால் கிஸ்ஸிங் காட்சிக்கு பயந்து நதியா மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

குறைவான பட்ஜெட்டில் உருவாகி கோடியில் லாபம் பார்த்த விஜய் சேதுபதியின் ஐந்து திரைப்படங்கள்.!

ரோஜா: தற்பொழுது அரசியலில் ஈடுபட்டு வந்தாலும் தற்பொழுது வரையிலும் ரோஜாவுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல மவுசு இருந்து வருகிறது. இவர் தெலுங்கு நடிகையாக இருந்தாலும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளார். ரஜினிகாந்த், விஜயகாந்த், சரத்குமார், சத்யராஜ், அஜித் என பல நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கும் ரோஜா கமலுடன் மட்டும் ஜோடி போடவில்லை அதற்கு காரணம் முத்த காட்சி தான் என கூறப்படுகிறது.