இந்தியன் 2 முதல் விடாமுயற்சி வரை 2024 இல் நெட்ப்ளிக்ஸிடம் அடி பணிந்த தமிழ் படங்கள்.!

இணையதளம் இன்று கடை கோடி மக்கள் வரை மிகவும் பிரபலமாக இருக்கிறது ஆனால் ஒரு காலகட்டத்தில் இணையதளம் என்பது மிகக் குறைவு அதனால் திரையரங்கில் போய் தான் படங்களை பார்த்து வந்தார்கள். அதனால் சினிமாவிற்கு அழிவு இல்லாமல் இருந்தது எப்பொழுது OTT இணையதளம் வந்ததோ அப்பொழுது திரையரங்கில் படங்களை பார்க்கும் மக்கள் குறைய தொடங்கி விட்டார்கள்.

ஒரு காலகட்டத்தில் புதிய திரைப்படங்கள் 300 நாட்கள் 400 நாட்கள் ஓடிக்கொண்டிருந்தது ஆனால் இப்பொழுது காலகட்டத்தில் ஒரு திரைப்படம் 20 நாள் திரையரங்கில் ஓடினாலே மிகப்பெரிய வெற்றி எனக் கூறுகிறார்கள். அந்த வகையில் ஓட்டிடி இணையதளங்களில் மிகப்பெரிய நிறுவனமாக இருப்பது netflix இந்த netflix நிறுவனம் 2024 முன்னணி நடிகர்களின் திரைப்படங்களை கைப்பற்றியுள்ளது. அந்த வகையில் எத்தனை திரைப்படங்களை கைப்பற்றியுள்ளது என்பதை இங்கே காணலாம்.

உனக்கெல்லாம் வெட்கமே இல்லையா..? மகளுடன் சேர்ந்துகொண்டு ரஜினி செய்த வேலை.! திட்டி தீர்க்கும் நெட்டிசன்ங்கள்..

எஸ்கே 21 : இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் சாய் பல்லவி ஆகியோர்கள் நடிக்க இருக்கிறார்கள் இந்த திரைப்படத்தை சிவகார்த்திகேயன் மற்றும் கமல் இருவரும் இணைந்து தயாரிக்கிறார்கள் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த திரைப்படத்தை நெட்ப்லிக்ஸ் நிறுவனம் ott உரிமையை வாங்கிவிட்டது.

இந்தியன் 2: ஷங்கர் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு வெளியாகி இந்தியன் திரைப்படத்தை தற்போது பல வருடங்களுக்கு பிறகு  இரண்டாவது பாகத்தை உருவாக்கி வருகிறார்கள். இந்த திரைப்படத்திலும் கமல் நடித்து வருகிறார் அதுமட்டுமில்லாமல் பிரியா பவானி சங்கர் காஜல் அகர்வால் என முக்கிய நடிகர் நடிகைகள் நடித்து வருகிறார்கள். இந்தியன் 2 திரைப்படத்தின் ஓடிடி உரிமையை netflix நிறுவனம் வாங்கிவிட்டது என கூறப்படுகிறது.

சத்தமே இல்லாமல் நிக்சன் வெளியிட்ட புகைப்படம்.!

தங்கலான் : பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தங்கலான் இந்த திரைப்படத்தை ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். அதேபோல் இந்த திரைப்படத்தையும் Netflix நிறுவனம் ஓடிடி உரிமையை கைப்பற்றி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

ரிவால்வர் ரீட்டா: கே சந்துரு இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகும் இந்த  திரைப்படத்தின் ஓடிடி உரிமையை netflix நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

விடாமுயற்சி: இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித்குமார், திரிஷா ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி திரைப்படத்தின் ஓடிடி உரிமையை Netflix  நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

முதன் முறையாக தமிழில் “A” சான்றிதழ் வாங்கிய படம் எது தெரியுமா.?

அதுமட்டுமில்லாமல் மகாராஜா, கன்னிவெடி, புஷ்பா 2, சலார், சொர்க்கவாசல் ஆகிய திரைப்படங்களின் ஓடிடி உரிமையையும் Netflix  நிறுவனம் கைப்பற்றியுள்ளது.