பில்டப் கொடுத்து தயாரிப்பாளர் தலையில் துண்டு போட வைத்த கார்த்தியின் 5 திரைப்படங்கள்.!

Actor Karthi Flop Movies: பருத்திவீரன் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி ஆயிரத்தில் ஒருவன், பையா, நான் மகான் அல்ல, சிறுத்தை என தொடர்ந்து சூப்பர் ஹிட் வெற்றி திரைப்படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் கார்த்தி.

இவருடைய நடிப்பில் கடைசியாக வெளியான ஜப்பான் திரைப்படம் படும் தோல்வியை சந்தித்தது அதேபோல் கார்த்தி நடிப்பில் வெளியாகி மொக்கை வாங்கிய முக்கியமான ஐந்து படங்கள் குறித்து பார்க்கலாம்.

சகுனி: 2012ஆம் ஆண்டு சங்கர் தயாள் இயக்கத்தில் கார்த்திக் ஹீரோவாக நடித்திருந்த சகுனி படத்தில் ரோஜா, சந்தானம், பிரகாஷ்ராஜ், ராதிகா போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அரசியல் கலந்த காமெடி படமாக உருவாகி படும் தோல்வியை சந்தித்தது.

உனக்கெல்லாம் வெட்கமே இல்லையா..? மகளுடன் சேர்ந்துகொண்டு ரஜினி செய்த வேலை.! திட்டி தீர்க்கும் நெட்டிசன்ங்கள்..

அலெக்ஸ் பாண்டியன்: 2013ஆம் ஆண்டு கார்த்தி மற்றும் அனுஷ்கா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த அலெக்ஸ் பாண்டியன் படத்தை சுராஜ் எழுதி இயக்கினார். ஆக்ஷன் கலந்த காமெடி படமாக உருவான இப்படத்தில் ஆக்சன் மிகவும் குறைவாக இருந்ததால் படும் தோல்வியை சந்தித்தது.

ஜப்பான்: கடந்தாண்டு கார்த்தியின் 25வது படமாக அமைந்த ஜப்பான் திரைப்படத்தை ராஜு முருகன் இயக்கினார். அதிரடியான நகைச்சுவை கலந்த படமாக உருவான இப்படம் சொல்லும் அளவிற்கு கதை அமையாத காரணத்தினால் ரசிகர்கள் மத்தியில் படும் மோசமான விமர்சனங்களை பெற்றது.

தேவ்: ராசாத் ரவிசங்கர் முதன்முறையாக எழுதி இயக்கிய தேவ் திரைப்படம் 2019ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தில் ஏன்டா நடித்தோம் என கார்த்தியே நினைத்து வருத்தப்பட்டார்.

எதுவுமே வேணாம்னு போறதும் தப்பு.. எல்லாமே வேணும்னு அலையறதும் தப்பு.. ஆனால் பறக்கும் சிம்புவின் 10 வசனங்கள்.!

காற்று வெளியிடை: 2017ஆம் ஆண்டு மணிரத்தினம் எழுதி இயக்கிய காற்று வெளியிடை படத்தில் கார்த்தி அதிதீ ராவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இப்படமும் சொல்லும் அளவிற்கு கதை அமையாத காரணத்தினால் மோசமான விமர்சனங்களை பெற்று தோல்வியை சந்தித்தது.