முதல் படத்திலேயே ரசிகர் மத்தியில் பிரபலமடைந்து பிறகு காணாமல் போன 5 நடிகைகள்.!

Top 5 tamil best debut actress: ஏராளமான பிரபலங்கள் தாங்கள் அறிமுகமான முதல் படத்திலேயே சூப்பர் ஹிட் கொடுத்துள்ளனர். இவ்வாறு தான் அறிமுகமான சில திரைப்படங்களில் அடுத்தடுத்து நடித்து வந்தாலும் தொடர்ந்து சினிமா வாய்ப்புகளை தக்கவைத்துக் கொள்வது குதிரை கொம்பாக உள்ளது. இந்த சூழலில் முதல் படத்திலேயே மரண ஹிட் கொடுத்த ஐந்து நடிகைகளின் திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம்.

கிரண்: விக்ரம் நடிப்பில் வெளியான ஜெமினி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ஹீரோயினாக அறிமுகமான கிரண் இந்த படத்தின் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களையும் கவர்ந்தார்.

அட லட்சுமிமேனனுக்கு இந்த நிலைமை.. யாருடன் ஜோடி சேருகிறார் பார்த்தீர்களா

ரீமா சென்: கௌதம் மேனன் இயக்கத்தில் சாக்லேட் பாய் மாதவன் நடிப்பில் வெளியான மின்னலே திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் ரீமா சென். இத்திரைப்படமும் மரண ஹிட்டாக அமைந்தது.

கேத்தரின் தெரசா: கார்த்திக் நடிப்பில் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான மெட்ராஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான கேத்ரின் தெரசா இதன் மூலம் கிடைத்த வெற்றியினால் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார்.

மீரா ஜாஸ்மின்: விஷால் ஹீரோவாக அறிமுகமான சண்டக்கோழி திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் மீரா ஜாஸ்மின். முதல் திரைப்படம் வெற்றிகரமாக அமைய இருவருமே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய பிரபலத்தை சந்தித்து தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற்றனர்.

ரித்திகா சிங்: மாதவன் நடிப்பில் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் தான் இறுதிச்சுற்று. இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான ரித்திகா சிங் தொடர்ந்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

அட லட்சுமிமேனனுக்கு இந்த நிலைமை.. யாருடன் ஜோடி சேருகிறார் பார்த்தீர்களா

இவ்வாறு ஐந்து நடிகைகளும் தற்பொழுது சொல்லும் அளவிற்கு திரைப்படங்களில் நடித்து பிசியாக இல்லை என்றாலும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள். முக்கியமாக கிரண் தனது கவர்ச்சியானால் ரசிகர்களை பெரிதளவிலும் கவர்ந்துள்ளார்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்