அட லட்சுமிமேனனுக்கு இந்த நிலைமை.. யாருடன் ஜோடி சேருகிறார் பார்த்தீர்களா

Lakshmi Menon: என்னதான் சினிமாவில் முன்னணி நடிகையாக கலக்கி வந்தாலும் சில காரணங்களால் தற்பொழுது பட வாய்ப்புகள் கிடைக்காமல் அவதிப்பட்டு வருபவர் தான் நடிகை லட்சுமி மேனன். ஸ்கூல் படிக்கும் வயதிலேயே தமிழ் சினிமாவில் ஹீரோயின் ஆக நடித்து வந்த இவர் பல ஹிட் திரைப்படங்களை கொடுத்தார்.

மேலும் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களிலும் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார். இதனை அடுத்து கல்லூரி படிப்பை முடித்துவிட்டு மீண்டும் சினிமாவில் நடிக்க தொடர்ந்தார் ஆனால் முன்பு போல் இருந்த வரவேற்பு கிடைக்கவில்லை.

அடப்பாவி அர்ஜுன், சரஸ்வதி புள்ளதாச்சு பொண்ணுன்னு கூட பாக்காம இப்படி பண்ணிட்டியே டா…! ஏம்மா நீயும் ஒரு பொண்ணு தானே இப்படியா நடந்துப்ப.. பரபரப்பின் உச்சத்தில் தமிழும் சரஸ்வதி..

இவ்வாறு வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வந்த லட்சுமி மேனன் பிக் பாஸ் டைட்டில் வின்னருக்கு ஜோடியாக நடிக்க இருக்கும் நிலையில் இந்த படத்தின் பூஜை குறித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல நிகழ்ச்சிகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல ஆதரவு உள்ளது அந்த வகையில் ஒன்றுதான் பிக் பாஸ்.

இந்நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமான பலரும் தொடர்ந்து சினிமாவில் பணியாற்றி வருகின்றனர் ஒரு சில பிரபலங்கள் மட்டுமே ஹீரோவாகவும் ஹீரோயின் ஆகவும் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி ஒருவர் தான் பிக் பாஸ் புகழ் நடிகர் ஆரி.

விசாரணைன்னு கூப்பிட்டு கொலை பண்றதுக்கு நான் ஒன்னும் உங்கள மாதிரி இல்ல… மிரட்டலாக வெளியானது சைரன் ட்ரைலர்

ஆரி பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய பிரபலத்தை கொடுத்தது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தொடர்ந்து படங்களில் நடித்து வரும் இவர் தற்பொழுது ராஜசேகர் பாண்டியன் இயக்க இருக்கும் புதிய படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளார். இப்படத்தில் தான் ஆரிக்கு ஜோடியாக லக்ஷ்மி மேனன் நடிக்க கமிட்டாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது அது குறித்த புகைப்படம் இதோ.