அடப்பாவி அர்ஜுன், சரஸ்வதி புள்ளதாச்சு பொண்ணுன்னு கூட பாக்காம இப்படி பண்ணிட்டியே டா…! ஏம்மா நீயும் ஒரு பொண்ணு தானே இப்படியா நடந்துப்ப.. பரபரப்பின் உச்சத்தில் தமிழும் சரஸ்வதி..

thamizhum saraswathiyum february 8 : தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில்  அர்ஜுன் வார்டனை பார்க்க வந்துள்ளார் வார்டன் வந்தவுடன் அவரிடம் அந்த சரஸ்வதி ஜெயிலில் டார்ச்சர் அனுபவிக்க வேண்டும் நிம்மதியாக இருக்கக்கூடாது அவ ரொம்ப தைரியமா இருப்பேன்னு சொல்லுவா அவ தைரியத்தை உடைக்கணும் என அர்ஜுன் பேசிக் கொண்டிருக்கிறார் இதனால் எனக்கு ஏதும் பிரச்சனை வந்துவிடாதே அதெல்லாம் எந்த பிரச்சனையும் வராது நான் பார்த்துக் கொள்கிறேன் என அர்ஜுன் பணத்தை கொடுக்கிறார்.

அடுத்த காட்சியில் தமிழ் வீட்டில் திடீரென சரஸ்வதிக்கு ஏதோ ஆனது போல் கனவு காணுகிறார். அதனால் தமிழ் புலம்பி கொண்டிருக்கிறார் எப்படியாவது போய் பார்க்க வேண்டும் என கூறுகிறார் ஆனால் இந்த நேரத்தில் பார்க்க முடியாது என அனைவரும் சமாதானப்படுத்தி பேசுகிறார்கள். அடுத்த காட்சியில் சரஸ்வதி உட்கார்ந்து கொண்டிருக்கும் பொழுது சாப்பாடு தட்டில் போட்டு கொடுக்கிறார்கள்.

விசாரணைன்னு கூப்பிட்டு கொலை பண்றதுக்கு நான் ஒன்னும் உங்கள மாதிரி இல்ல… மிரட்டலாக வெளியானது சைரன் ட்ரைலர்

சாப்பாட்டை எடுத்து சாப்பிடு என வாடன் மிரட்டுகிறார் அதை சாப்பிட்டவுடன் உப்பு காரம் அதிகமாக இருப்பதால் துப்பி விடுகிறார். உடனே தண்ணிய மோந்து குடித்துவிட்டு எனக்கு சாப்பாடு வேண்டாம் என கூறிவிடுகிறார். அர்ஜுன் கொடுத்த பணத்தை வாங்கிக் கொண்டு இப்படி கர்ப்பிணி பெண் என்பது கூட பார்க்காமல் மிகவும் சித்திரவதை செய்து கொண்டிருக்கிறார். அடுத்ததாக தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது இவை எப்படி நிம்மதியா தூங்கலாம் என தண்ணீரை எடுத்து வந்து மேலே ஊற்றுகிறார் ஜெயில் வாடன்.

அடுத்த நாள் காலையில் தமிழ் மற்றும் நமச்சி சரஸ்வதியை பார்க்க வருகிறார் அப்பொழுது அவரிடம் பேசிக் கொண்டிருக்கும் பொழுது மிகவும் சோர்வாக இருப்பதை தமிழ் பார்க்கிறார் உடனே உனக்கு என்ன ஆச்சு உடம்பு சரியில்லையா ஏன் கண்ணு எல்லாம் உள்ள போய் கிடக்குது என பேசிக் கொண்டிருக்கிறார் அப்பொழுது அருகில் உள்ளவர் இவளை எப்படியாவது வெளியில கூட்டிட்டு போயிடு இவ இங்க இருந்து எவ்வளவு டார்ச்சர் அனுபவிக்கிறார் மேல தண்ணி ஊத்துறாங்க சாப்பாட்டுல மிளகாய் பொடி அள்ளி போட்டு கொடுக்குறாங்க என அனைத்தையும் சொல்லுகிறார்.

கோடி அருவி கொட்டுதே அடி என் மேல… அது தேடி உசுர முட்டுதே நெதம் உன்னால.. கட்டி பிடித்து ரோமன்ஸ் பண்ணும் புது பொண்ணு மாப்பிளை முத்து மீனா.!

உடனே தமிழ் கொதித்து எழுகிறார் தமிழ் ஜெயில் வார்டன் வந்ததும் என்ன இப்படி மரியாதை இல்லாம நடத்துறீங்க என திட்டுகிறார் ஜெயில் வாரனும் உங்களுக்கு என்ன மரியாதை கொலைகார குடும்பம் என பேசுகிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது இனி வரும்  எபிசோடில் தமிழ் சரஸ்வதியை காப்பாற்றுவாரா அல்லது ஜெயில் வாடன் மீது கேஸ் கொடுக்கப் போகிறாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.