ஒரே வருடத்தில் தீபாவளிக்கு போட்டி போட்டுக் கொண்டு ரிலீஸ் ஆன கமலின் நான்கு திரைப்படங்கள்.! அதில் மூன்று திரைப்படம் மரண ஹிட்..

Kamal Haasan: உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒரே ஆண்டில் நான்கு திரைப்படங்கள் வெளியான சுவாரசியமான தகவல் குறித்து தெரியவந்துள்ளது. பொதுவாக பண்டிகைகளை முன்னிட்டு திரைப்படங்கள் ரிலீஸ் ஆவது வழக்கம். அப்படி 1978ஆம் ஆண்டு தீபாவளிக்கு மட்டும் கமலஹாசன் அடிப்படையில் நான்கு திரைப்படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளது.

சிகப்பு ரோஜாக்கள்: பாரதிராஜா இயக்கத்தில் 1978ஆம் ஆண்டு அக்டோபர் 28ஆம் தேதி திரையில் வெளியான திரைப்படம் தான் சிகப்பு ரோஜாக்கள். இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக ஸ்ரீதேவி நடித்திருந்தார் திரில்லர் கதை அம்சம் கொண்ட இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

ஆணவத்தில் பேசிய இளையராஜாவை ஒரே வார்த்தையால் வாயடைக்க செய்த பாலு மகேந்திரா.! தரமான சம்பவம்

மனிதரில் இத்தனை நிறங்களா: 1978ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான சிகப்பு ரோஜாக்கள் படத்திற்கு போட்டியாக கமல்ஹாசன் நடித்த மனிதரில் இத்தனை நிறங்களா படம் வெளியானது. இப்படத்திலும் கமலுக்கு ஜோடியாக ஸ்ரீதேவி நடித்திருந்தார். மனிதரில் இத்தனை நிறங்களா படத்தை ஆர்.சி சக்தி இயக்க கண்ணதாசனின் பாடல் வரிகள் ரசிகர்களை பெரிதளவிலும் கவர்ந்தது.

அவள் அப்படித்தான்: 1978ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியான மற்றொரு கமலின் படம் தான் அவள் அப்படிதான். இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக ஸ்ரீபிரியா நடிக்க அக்டோபர் 30ஆம் தேதி வெளியானது. இதில் ரஜினி, கமல் இருவரும் இணைந்து நடிக்க ருத்ரைய்யா இயக்கியிருந்தார்.

காமெடி நடிகர் பாண்டுவை ஞாபகம் இருக்கிறதா.! அட அவரின் மகனும் ஒரு நடிகரா.?

தப்புத்தாளங்கள்: 1978ஆம் ஆண்டு தீபாவளிக்கு ரிலீசான கமலின் நான்காவது படம் தான் தப்புத் தாளங்கள். இப்படத்தை பாலச்சந்தர் இயக்க ரஜினிகாந்த் மற்றும் சரிதா இணைந்து நடித்தனர். மேலும் கமல்ஹாசன் இப்படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார். அக்டோபர் 30ஆம் தேதி திரையில் வெளியான படம் சூப்பர் ஹிட் அடித்தது.