முதல் 200 கோடி வசூல் செய்த 5 தமிழ் நடிகர்களின் திரைபடங்கள்..!

Top 5 tamil actors first 200cr movie: அக்கட தேச திரைப்படங்களுக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் பெரும்பாலும் தெலுங்கு, ஹிந்தி திரைப்படங்கள் பான் இந்திய படமாக ரிலீஸ்சாகி சில நாட்களிலேயே 1000 கோடி வசூல் செய்து சாதனை படைத்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த ஆண்டு வெளியான பதான், RRR உள்ளிட்ட திரைப்படங்களுக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இவ்வாறு மற்ற மொழி திரைப்படங்கள் 1000 கோடி வசூல் செய்து வரும் நிலையில் இதுவரை தமிழ் திரைப்படங்கள் 1000 கோடி வசூலை எட்டவில்லை. இந்த சூழலில் கடந்த ஆண்டு தான் ரஜினியின் ஜெயிலர், விஜய்யின் லியோ போன்ற படங்கள் 600 கோடியை ஏட்டியுள்ளது. இந்நிலையில் 5 தமிழ் நடிகர்களின் முதல் 200 கோடி வசூல் செய்த படங்கள் குறித்து பார்க்கலாம்.

ஒரிஜினல் ஃபீல் வரவே இல்லை.. நேரம் பார்த்து பொன்னியின் செல்வன் படத்தை விமர்சித்த இளையராஜா!

5. விக்ரம்: 2015ஆம் ஆண்டு சங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ஐ. இப்படத்தில் விக்ரமுடன் இணைந்து எமி ஜாக்சன், சுரேஷ் கோபி, சந்தானம், உபேன் படேல், ராம்குமார் கணேசன் உள்ளிட்ட மேலும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். விக்ரம் நடிப்பில் வெளியாகி 200 கோடி வசூல் செய்த முதல் படமாக ஐ அமைந்தது மேலும் விக்ரமின் 100 கோடி வசூல் செய்த படமும் ஐ தான்.

4. அஜித் குமார்: 2019ஆம் ஆண்டு அஜித்குமார், நயன்தாரா, விவேக், யோகி பாபு ஆகியோர்கள் நடித்திருந்த விசுவாசம் திரைப்படம் 200 கோடி வசூலை பெற்றது. அஜித்தின் 200 கோடி வசூல் செய்த முதல் படமாக அமைந்த விசுவாசம் படத்தினை சிவா இயக்கினார்.

3. விஜய்: தளபதி விஜய், காஜல் அகர்வால், வடிவேலு, எஸ்.ஜே சூர்யா, நித்யா மேனன், சமந்தா, கோவை சரளா, ராஜேந்திரன், சத்யராஜ் போன்றவர்களின் கூட்டணியில் 2017ஆம் ஆண்டு அட்லீ இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த படம் தான் மெர்சல். இப்படமும் 200 கோடி வசூல் செய்தது விஜய் நடிப்பில் வெளியாகி முதன்முறையாக 200 கோடி வசூல் செய்த படமாக மெர்சல் அமைந்துள்ளது.

விஜயகாந்தின் நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தி 5 பிரபலங்கள்.! பாண்டிச்சேரிக்கும் சென்னைக்கும் 5000 km மேடம்.? நடிகையை போலந்து கட்டிய ரசிகர்கள்..

2. கமல்ஹாசன்: உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் 2018ஆம் ஆண்டு வெளியான விஸ்வரூபம் 2 படத்தினை கமல்ஹாசனே இயக்கி, தயாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் ராகுல் போஸ், பூஜா குமார், ஆண்ட்ரியா, நாசர் போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இப்படமும் 200 கோடியை தாண்டி வசூல் செய்தது.

1. ரஜினிகாந்த்: ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி தமிழ்நாட்டில் மட்டுமே 100 கோடிக்கும் மேல் வசூல் செய்த முதல் படமாக எந்திரன் அமைந்துள்ளது. இப்படம் உலக அளவில் 200 கோடிக்கு மேல் வசூல் செய்தது. எந்திரன் படத்தை எஸ்.ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியானது.