விஜயகாந்தின் நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தி 5 பிரபலங்கள்.! பாண்டிச்சேரிக்கும் சென்னைக்கும் 5000 km மேடம்.? நடிகையை போலந்து கட்டிய ரசிகர்கள்..

Captain Vijayakanth: தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்தின் மறைவு ஒட்டுமொத்த தமிழகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கும் நிலையில் தற்பொழுது வரையிலும் இவருடைய நினைவுகள் அனைவரும் மனதிலும் நிறைந்துள்ளது. அனைவருக்கும் உதவி செய்ய வேண்டும் என நல்ல எண்ணம் உடைய சொக்கத்தங்கத்தை இழந்து விட்டு தமிழக மக்கள் சோகத்தில் உள்ளனர்.

மேலும் இவருடைய இறப்பிற்கு கமல்ஹாசன், விஜய், விஜய் ஆண்டனி உள்ளிட்ட மேலும் பல நடிகர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள். மற்ற பலரும் படப்பிடிப்பில் இருப்பதனால் சோசியல் மீடியாவின் மூலம் அஞ்சலி செலுத்தினார்கள்.

இதனை அடுத்து சென்னை வந்தவுடன் முதல் கட்டமாக கேப்டன் விஜயகாந்தின் சமாதியில் மாலை அணிந்து மரியாதை செலுத்தியதோடு மட்டுமல்லாமல் தங்களுடைய வருத்தங்களையும் தெரிவித்துள்ளனர். விஜயகாந்துடன் இருந்த நினைவுகளையும் பகிர்ந்து இருக்கும் நிலையில் அந்த பிரபலங்கள் குறித்து பார்க்கலாம்.

விடாமுயற்சி படத்தில் த்ரிஷா கதாபாத்திரத்தின் பெயர் என்ன தெரியுமா.? ரொம்ப சென்டிமென்ட்டா இருக்கே..

சூர்யா: நடிகர் சூர்யா சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார. இதற்கான படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் வெளிநாடுகளில் நடைபெற்று வருகிறது கேப்டனின் மறைவின் பொழுது வெளிநாட்டில் இருந்ததால் காரில் இருந்தபடி இரங்கல் தெரிவித்தார்.

இதனை அடுத்து சென்னை திரும்பியவுடன் கேப்டன் விஜயகாந்தின் சமாதிக்கு மரியாதை செலுத்தி விட்டு உட்கார்ந்து கண் கலங்கினார். இதனை அடுத்து செய்தி வாசிப்பாளர்களை சந்தித்த சூர்யா சினிமா நட்சத்திரங்கள் என்றாலே தூரமா இருக்க பாப்பாங்க ஆனா கேப்டன் விஜயகாந்த் தான் அனைவரையும் பக்கத்துல வச்சிப்பாரு அவரிடம் எளிமையாக பேசிவிடலாம் என கண்கலங்கி பல தகவல்களை பகிர்ந்தார்.

புகழ்: விஜய் டிவி காமெடி நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமாகி தற்பொழுது காமெடியனாக சினிமாவில் கலக்கி வரும் புகழ் விஜயகாந்த் நினைவிடத்தில் மாலை அணிந்து மரியாதை செலுத்தி விட்டு செய்தி வாசிப்பாளரை சந்தித்த பொழுது நானும் விஜயகாந்த் ஐயாவை போலவே அனைவருக்கும் சாப்பாடு தர முடிவெடுத்து இருப்பதாகவும் இன்றிலிருந்து நான் நாள்தோறும் பசின்னு வரும் 50 பேருக்கு மதிய உணவு கேகே நகர் தனது ஆஃபீஸில் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

ஜெயம் ரவி: கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் மரியாதை செலுத்திவிட்டு செய்தி வாசிப்பாளரை சந்தித்த ஜெயம் ரவி அவருடைய ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன் எல்லாரும் நல்லா இருக்கணும்னு உள்ளம் கொண்டவர் என மேலும் பல தகவல்களையும் பகிர்ந்துள்ளார்.

பிக்பாஸ் 7 போட்டியாளர்கள் ஒரு நாளைக்கு வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா.? அர்ச்சனாவை விட அதிகம் வாங்கும் நபர்

ஐஸ்வர்யா ராஜேஷ்: நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கேப்டன் விஜயகாந்தின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி விட்டு செய்தியாளரை சந்தித்த பொழுது தன்னால் விஜயகாந்த் சார் இறப்பிற்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்த முடியவில்லை பாண்டிச்சேரி படப்பிடிப்பில் இருந்தேன் விஜயகாந்தின் இரண்டு மகன்களும் எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர்கள் அவர்களிடம் அடிக்கடி கேட்டுள்ளேன்.

ஆனால் என்னால் விஜயகாந்தை நேரில் பார்க்க முடியவில்லை என தெரிவித்தார். இதற்கு பாண்டிச்சேரியில் இருந்து இங்கு வர முடியவில்லையா என ரசிகர்கள் ஐஸ்வர்யா ராஜேஷை மீடியாவில் திட்டி தீர்த்து வருகின்றனர்.

பூர்ணிமா ரவி: பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பங்கு பெற்று வந்த பூர்ணிமா ரவி இரு தினங்களுக்கு முன்பு 16 லட்சம் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். இதனை அடுத்து நேற்று கேப்டனின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.