விடாமுயற்சி படத்தில் த்ரிஷா கதாபாத்திரத்தின் பெயர் என்ன தெரியுமா.? ரொம்ப சென்டிமென்ட்டா இருக்கே..

Vidaamuyaechi : நடிகர் அஜித்குமார்  லைகா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார் படத்தின் சூட்டிங்  அஜர்பைஜானில்  நடைபெற்று வந்த நிலையில் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ஸ்ரீ பிரேக் எடுத்தது. இதை அஜித் சரியாக பயன்படுத்திக் கொண்டார்.

தனது மகளின் பிறந்தநாளை துபாயில் வெகு விமர்சையாக கொண்டாடினார் அப்பொழுது அஜித் நடனமாடிய வீடியோ வெளிவந்து ரசிகர்களை குத்தாட்டம் போட வைத்தது. அதனைத் தொடர்ந்து வரும் ஏழாம் தேதி அடுத்த கட்ட ஷூட்டிங் தொடங்கப்பட இருக்கிறதாம்.

பிக்பாஸ் 7 போட்டியாளர்கள் ஒரு நாளைக்கு வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா.? அர்ச்சனாவை விட அதிகம் வாங்கும் நபர்

விடாமுயற்சி படத்தில் அஜித் உடன் இணைந்து திரிஷா, அர்ஜுன், பிக்பாஸ் ஆரவ், ரெஜினா மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர் படம் முழுக்க முழுக்க அதிரடி ஆக்சன் மற்றும் த்ரில்லர் கலந்த படமாக உருவாகி வருகிறதாம்.  அடுத்த கட்ட ஷூட்டிங்கிற்கு சில தினங்களே இருக்கின்றன. அதில்  அஜித், திரிஷா காம்பினேஷன்  காட்சிகளை தான் எடுக்க இருப்பதாக தகவல்கள் வெளி வருகின்றன.

இந்த நிலையில் விடாமுயற்சி படத்திலிருந்து ஒரு அப்டேட் வெளியாகியுள்ளது.  அஜித் நடிக்கும் கதாபாத்திரத்திற்கு அர்ஜுன் என பெயர் வைக்கப்பட்டு இருந்தது அதுபோல திரிஷா கதாபாத்திரத்திற்கான பெயரும் தற்பொழுது வெளியாகி உள்ளது திரிஷா கதாபாத்திரத்தின் பெயர் கயல் என கூறப்படுகிறது.

பாதியிலேயே வந்தாலும் பணத்தோட வந்தோம்ல்ல அதனால தான் இந்த அலப்பறை.. நடுத்தெருவில் இறங்கி குத்தாட்டம் போட்ட பூர்ணிமா..

திரிஷா, அஜித் காமினேஷனில் ஏற்கனவே வெளிவந்த படங்கள் வெற்றி பெற்ற நிலையில் இந்த படமும் வெற்றி பெறும் என ரசிகர்கள் பெரிய ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். ஒரு பக்கம் திரிஷா  விடாமுயற்சி படத்தில் தீவிரமாக நடிக்க இதற்கு இடையில் டொவினோ தாமஸ் மனதிலும் கமிட்டாகி நடித்து வருகிறாராம்.