பிக்பாஸ் 7 போட்டியாளர்கள் ஒரு நாளைக்கு வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா.? அர்ச்சனாவை விட அதிகம் வாங்கும் நபர்

Bigg Boss 7 : தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற பல்வேறு மொழிகளில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் முகம் தெரிந்த மற்றும் முகம் தெரியாத பல பிரபலங்களை ஒரு வீடு போன்ற செட்டில் இறக்கிவிட்டு அங்கு தங்குவதற்கு சம்பளத்துடன் சாப்பாடும் போட்டு இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர்.

தமிழில் தற்பொழுது பிக்பாஸ் 7 -வது சீசன் பைனலை நெருங்கியுள்ளது.. இந்த நிலையில் இந்த சீசனில் கலந்து கொண்ட மொத்தம் 25 போட்டியாளர்களுக்கும் யார் யாருக்கு எவ்வளவு சம்பளம் என்ற விவரம் வெளியாகி உள்ளது.. அதைப் பற்றி விலாவாரியாக பார்ப்போம்..

பாதியிலேயே வந்தாலும் பணத்தோட வந்தோம்ல்ல அதனால தான் இந்த அலப்பறை.. நடுத்தெருவில் இறங்கி குத்தாட்டம் போட்ட பூர்ணிமா..

விசித்ரா : இந்த வீட்டில் அதிக வயதுடைய போட்டியாளரான இவர் 90 நாட்களைக் கடந்து பிக் பாஸ் வீட்டில் இன்றும் பயணிப்பது ஆச்சரியத்துக்கு உள்ளாகியது, அந்த அளவிற்கு விசித்திராவிற்கு நிறைய ரசிகர்களும் இருக்கின்றன.. இதற்கு முன் விசித்ரா விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டதால் இவருக்கு இந்த சேனல் சார்பாக ஒரு நாளைக்கு 30,000 சம்பளம் என வழங்கப்படுகிறது.

இந்த பிக் பாஸ் போட்டியாளர்களில் அதிக சம்பளம் வாங்குபவரும் விசித்ரா தான் என்பது குறிப்பிடத்தக்கது. விஷ்ணு, யுகேந்திரன், கானா பாலா மற்றும் ரவீனா : விஷ்ணு விஜய் டிவியில் சில சீரியல்களில் நடித்தவர் கானா பாலா மற்றும் யுகேந்திரன் பிரபல பாடகர்கள் ரவீனாவும் சீரியல் நடிகை மற்றும் அண்மையில் குக் வித் கோமாளிலும் கோமாளியாக கலந்து கொண்டு புகழ் பெற்றவர்.

அர்ஜுன் தாஸ் ஹீரோவாக நடித்துள்ள ரசவாதி திரைப்படத்தின் டீசர் இதோ..!

இவர்கள் நான்கு பேருக்கும் ஒரு நாளைக்கு 25 ஆயிரம் சம்பளமாக பேசப்பட்டுள்ளது..  பிரதீப், மாயா மற்றும் தினேஷ் : இதில் பிரதீப் இந்த பிக்பாஸ் 7 ல் வந்த சில வாரங்களிலேயே போட்டியாளர்கள் சிலரால் ரெக்கார்ட் பெற்று வெளியேறினார்.. மாயா மற்றும் தினேஷ் இருவரும் 90 நாட்களைக் கடந்து இன்றும் பிக் பாஸ் வீட்டில் பயணித்து வருகின்றனர்.

இவர்கள் மூன்று பேருக்கும் பிக் பாஸ் வீட்டில் ஒரு நாளைக்கு 20,000 சம்பளம் பேசப்பட்டுள்ளது.. கூல் சுரேஷ் முதல் வினுஷா தேவி வரை : இந்த சீசனில் பெரும்பாலான போட்டியாளர்களுக்கு ஒரு நாளைக்கு 15 ஆயிரம் சம்பளம் தான், அந்த வரிசையில் இடம் பிடித்தவர்கள் அர்ச்சனா, அண்ண பாரதி, பிராவோ, சரவண விக்ரம், மணிசந்திரா, அக்ஷயா, விஜய் வருமா, பூர்ணிமா, ஐஷு, வினுஷா தேவி போன்றவர்களுக்கு ஒரு நாளைக்கு 15000 சம்பளம் பேசப்பட்டுள்ளது..

இதில் மணி சந்திரா, அர்ச்சனா, விஜய் வர்மா போன்றவர்கள் இன்னும் பிக் பாஸ் வீட்டில் பயணித்து வருகின்றனர், பூர்ணிமா அண்மையில் தான் 16 லட்சம் மதிப்புள்ள பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு பிக் பாஸ் வீட்டை விட்டு சென்றுள்ளார்.  நிக்சன், ஜோவிகா, அனன்யா : இவர்கள் மூவருக்கும் ஒரு நாளைக்கு 10000 சம்பளம் பேசப்பட்டது.

குறைந்த சம்பளம் வாங்கும் லிஸ்டில் இவர்கள் மூன்று பேர்தான் இடம் பிடித்துள்ளனர்.. இதில் அனன்யா பிக் பாஸ் வீட்டிற்கு வந்த ஒரே வாரத்தில் எவிட் ஆக பிறகு வைல்டு கார்டு வாய்ப்பு கிடைத்தது அதையும் அவர் கரெக்டாக பயன்படுத்தவில்லை, நிக்சனும் ஜோவிகாவும் ஓரளவு சிறப்பாக விளையாடினர்..