இயக்குனராக கெத்து காட்டிய வெற்றிமாறன் தயாரிப்பாளராக இத்தனை ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளாரா.. இதோ முழு லிஸ்ட்

Vetrimaaran: பொல்லாதவன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான நடிகர் வெற்றிமாறன் ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன் பாவ கதைகள், விடுதலை என பல வெற்றி திரைப்படங்களை தந்து வருகிறார் இவ்வாறு வெற்றிமாறன் இயக்குனராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் வெற்றினை கண்ட டாப் 5 படங்கள்.

5. உதயம் NH4: 2013ஆம் ஆண்டு அதிரடி ஆக்சன் திரில்லர் திரைப்படமாக சித்தார்த் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் தான் உதயம் NH4. இப்படத்தை மணிமாறன் இயக்க சித்தார்த், அஷ்ரிதா ஷெட்டி இணைந்து நடித்தனர். இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்க வெற்றிமாறன், தயாநிதி அழகிரி இருவரும் இணைந்து தயாரித்திருந்தனர்.

பங்காளி கொஞ்சம் நஞ்ச ஆட்டமா ஆடுன.! சிங்கம் சூர்யா போல் ஓங்கி ஒரே அடியாக அடித்த முத்து.! எழுந்திருக்க முடியாமல் திணறும் மனோஜ்..

4. காக்கா முட்டை: நகைச்சுவை படமாக அமைந்த காக்கா முட்டை படம் 2015ஆம் ஆண்டு வெளியானது. இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் அம்மாவாக நடிக்க ரமேஷ், விக்னேஷ் இருவரும் சின்ன காக்கா முட்டை பெரிய காக்கா முட்டையாக நடித்திருந்தனர். இவ்வாறு பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த இப்படத்தினை தனுஷ், வெற்றிமாறன் இணைந்து தயாரித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

3. விசாரணை: 2015ஆம் ஆண்டு அட்டகத்தி தினேஷ், ஆனந்தி, ஆடுகளம் முருகதாஸ், சமுத்திரகனி ஆகியோர்கள் இணைந்து நடித்த இந்த படத்தினை இயக்கிய வெற்றிமாறன் தனுஷ் உடன் இணைந்து தயாரிக்கவும் செய்தார்.

2. கொடி: தனுஷ் முதன்முறையாக இரட்டை வேடத்தில் நடித்த கொடி திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படத்தில் திரிஷா, அனுபமா பரமேஸ்வரன், சரண்யா பொன்வண்ணன், எஸ்.ஏ சந்திரசேகர் போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். 2016ஆம் ஆண்டு வெளியான இந்த சூப்பர் ஹிட் படத்தை வெற்றிமாறன் தான் தயாரித்தார்.

விஜயகாந்த் மறைவுக்கு வராத வடிவேலு.. கலைஞர் 100 விழாவில் பங்கமாய் அவமானம்.. தீராத வன்மத்தில் திரை துறையினர்..

1. வட சென்னை: தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, அமீர், டேனியல் பாலாஜி, கிஷோர், பவன், ஹரிகிருஷ்ணன் போன்றவர்களின் கூட்டணியில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த இந்த படத்தினை வெற்றிமாறன் இயக்க மேலும் தனுஷ், சுபாஷ் கரன், வெற்றிமாறன் மூன்று பேரும் இணைந்து தயாரித்தனர் இப்படத்தின் மூலம் இவர்களுக்கு மிகப்பெரிய லாபம் கிடைத்தது.