விஜயகாந்த் மறைவுக்கு வராத வடிவேலு.. கலைஞர் 100 விழாவில் பங்கமாய் அவமானம்.. தீராத வன்மத்தில் திரை துறையினர்..

vadivelu : தமிழ் சினிமாவில் கவுண்டமணி செந்தில்லுக்கு  பிறகு காமெடியில் கொடி கட்டி பறந்தவர் நடிகர் வடிவேலு இவரின் காமெடி தான் இன்று வரை மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு தீனி போட்டு வருகிறது. அதே போல் வடிவேலு காமெடிக்கு தனி ரசிகர் பட்டாளமே இருந்து வந்தது திரையில் வடிவேலுவை ரசித்தாலும் திரைக்கு வெளியில் வடிவேலுவை வெறுப்பதற்கு பல பேர் இருக்கிறார்கள்.

அதேபோல் வடிவேலு எப்பொழுது அரசியல் பக்கம் தலை நீட்டினாரோ அதிலிருந்து தான் அவருக்கு ஏழரை வடிவேலு விஜயகாந்த் பற்றி மிகவும் மோசமாக மேடைகளில் விமர்சித்தார் இதனால் மக்கள் மத்தியில் வடிவேலு மீது இருந்த நட்பெயர் குறைந்தது அதுமட்டுமில்லாமல் திரை பிரபலங்களும் வடிவேலுவை வெறுக்க ஆரம்பித்தார்கள்.

அதற்கு காரணம் வடிவில் தன்னுடன் நடிக்கும் நடிகர்கள் வளர்ந்து விடக்கூடாது என மட்டம் தட்டி வைப்பார் அது மட்டும் இல்லாமல் தன்னை அவமதித்தால் அவருக்கு வாய்ப்பே கொடுக்க மாட்டார் அந்த வகையில் வடிவேலு சொல்வதைக் கேட்டால் மட்டுமே தன்னுடன் நடிப்பதற்கு வாய்ப்பு கொடுப்பார்.

மேலும் வடிவேலு விஜகாந்தை எதிர்த்த பிறகு சினிமாவில் வாய்ப்பு கொடுக்கவில்லை யாரும் அதன் பிறகு விஜயகாந்த் தான் அனுமதித்த பிறகு தான் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது எனக் கூறப்படுகிறது இருந்தாலும் விஜயகாந்த் மற்றும் வடிவேலுக்கு இடையே சுமுகமான உறவு இல்லை.

அப்படி இருக்கும் நிலையில் விஜயகாந்த் சமீபத்தில் டிசம்பர் 28ஆம் தேதி மறைந்து விட்டார் அவரின் மறைவிற்கு வடிவேலு வரவும் இல்லை இரங்கலும் தெரிவிக்கவில்லை இதனால் பல பிரபலங்கள் கண்டனம் தெரிவித்தார்கள் அதுமட்டுமில்லாமல் வடிவேலுவை இப்படி இருந்தது பல பிரபலங்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் கலைஞர் நூறாவது விழா சமீபத்தில் நடைபெற்றது அந்த விழாவில் வடிவேல் கலந்து கொண்டார் அப்பொழுது அனைத்து பிரபலங்களும் ஏறி செல்வதற்கு கார் வந்திருந்தது ஆனால் வடிவேலு வந்த பொழுது வடிவேலுக்கு கார் வரவே இல்லை இரண்டு மூன்று கார்கள் சென்ற பிறகுதான் வடிவேலுவை அழைத்து சென்றுள்ளார்கள்.

எப்பொழுது விஜயகாந்தை அவமதித்தாரோ அப்பொழுது வடிவேலுக்கு சினிமாவில் இருந்த செல்வாக்கு சுத்தமாக போய்விட்டது இனிமேல் அனைவரும் வடிவேலுவை ஒரு பொருட்டாக மதிக்க மாட்டார்கள் என எதிர்பார்க்கபடுகிறது.