ரஜினி கமலுக்கே பயத்தை காட்டிய 5 புது முகங்கள்.. 300 நாட்களுக்கு மேல் திரையில் ஓடிய டாப் 5 படங்கள்

Tamil Movies: குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்கு அறிமுகமாகி தற்பொழுது உச்ச நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருக்கும் கமல்ஹாசன் தொடர்ந்த பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இவ்வாறு கமல்ஹாசன் சினிமாவில் பிரபலமாக இருந்த காலகட்டத்தில் அறிமுகமானவர் தான் ரஜினி.

ஒரு காலகட்டத்தில் இருவரும் தொடர்ந்து போட்டி போட்டுக் கொண்டு ஹிட் திரைப்படங்களை கொடுத்து வந்தனர் இவ்வாறு இவர்கள் சினிமாவில் பீக்கில் இருந்த பொழுதும் புதுமுக நடிகர்களின் திரைப்படங்கள் 300 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்துள்ளது அப்படி 70, 80 படங்கள் குறித்த லிஸ்ட்.

கிழக்கே போகும் ரயில்: பாரதிராஜா இயக்கத்தில் 1978ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் கிழக்கே போகும் ரயில். இத்திரைப்படத்தில் சுதாகர், ராதிகா இருவரும் இணைந்து நடித்தனர் இப்படம் 365 நாட்கள் வரை திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்தது.

ஹாஸ்பிடலில் அண்ணாமலை தாலியை அடகு வைக்க சொன்ன மீனா.! ஸ்ருதியை கிழித்து தொங்கவிட்ட முத்து..

நெஞ்சத்தைக் கிள்ளாதே: 1980ல் வெளியான நெஞ்சத்தைக் கிள்ளாதே படத்தை மகேந்திரன் இயக்க மோகன், சுஹாசினி இணைந்து நடித்தனர். இப்படம் 400 நாட்களுக்கு மேல் ஓடி கமல் ரஜினியை கதி கலங்க வைத்தது.

ஒரு தலை ராகம்: இயக்குனர் ராஜேந்திரன் இயக்கத்தில் 1980ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் சங்கர், ரூபா இணைந்து நடித்தனர். ஒரு தலை ராகம் படம் 365 நாட்கள் திரையரங்குகளில் ஓடிவுள்ளது.

மண்வாசனை: பாரதிராஜா இயக்கத்தில் வெளியான படத்திற்கு இளையராஜா இசையமைத்தார் 1983ஆம் ஆண்டு வெளியான மண்வாசனை படத்தில் பாண்டியன் ரேவதி இணைந்து நடித்தனர் இப்படம் 300 நாட்களுக்கு மேல் ஓடி மரண ஹிட் அடித்தது.

நான் வாந்தி எடுத்ததை என்னையே சாப்பிட சொல்றியா.. இயக்குனரிடம் கர்ஜித்த இளையராஜா..

என் ராசாவின் மனசிலே: 1991ஆம் ஆண்டு வெளியான என் ராசாவின் மனசிலே திரைப்படத்தில் ராஜ்கிரண், மீனா, வடிவேலு ஆகியோர்கள் இணைந்து நடித்தனர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்க கஸ்தூரிராஜா இயக்க 300 நாட்களுக்கு மேல் தியேட்டரில் ஓடி மிகப்பெரிய சம்பவம் செய்தது.