ரக்கட் கேர்ள்ளாக நடித்து மிரட்டி விட்ட டாப் 5 நடிகைகள்.! ராவாக நடித்த கீர்த்தி சுரேஷ்…

Tamil Actress: ஏராளமான நடிகைகள் ஹீரோயினாக மட்டும் தான் நடிப்பேன் என நடித்து வருபவர்கள் இருக்கின்றனர். ஒரு சில நடிகர்கள் மட்டுமே தன்னுடைய கேரக்டருக்கு முக்கியத்துவம் இருக்கும் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் நடிப்பேன் என பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தங்களுக்கான இடத்தை உருவாக்கியுள்ளார்கள். அப்படி ரகடு கேல்லாக நடித்து மிரட்டிய டாப் 5 நடிகைகள் குறித்து பார்க்கலாம்.

ஆண்ட்ரியா: நடிகை ஆண்ட்ரியா இயக்குனர் ராம் இயக்கத்தில் 2017ஆம் ஆண்டு வெளிவந்த தரமணி திரைப்படத்தில் எதார்த்தமான வலிமையுள்ள கேரக்டரில் நடித்து அசத்தியிருப்பார்.

அச்சம் என்பது இல்லையே.. ஹாலிவுட் தரத்தில் மிரட்டும் அருண் விஜயின் மிஷன் சாப்டர்-1 டிரைலர்.!

ரித்திகா சிங்: சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன், ரித்திகா சிங், சுதா, சந்தோஷ் நாராயணன் இணைந்து நடித்த இறுதிச்சுற்று திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இப்படத்தில் ரித்திகா சிங் துணிச்சலான கேரக்டரில் படம் முழுவதும் நடித்து கலக்கி இருப்பார்.

அஞ்சலி: ஜெய், அஞ்சலி, சர்வானந்த், அனன்யா மற்றும் பல பிரபலங்கள் இணைந்து நடித்திருந்த எங்கேயும் எப்பொழுதும் திரைப்படம் 2021ஆம் ஆண்டு வெளியானது. இப்படத்தினை எம் சரவணன் இயக்க அஞ்சலி ஒரு பொண்ணுனா இப்படித்தான் இருக்க வேண்டும் என சொல்லும் அளவிற்கு துணிச்சலான கேரக்டரில் நடித்து பலரையும் மெய்சிலிர்க்க வைத்தார்.

அபர்ணா பாலமுரளி: சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியாகி தேசிய விருதை வென்ற சூரரைப் போற்று திரைப்படத்தில் அபர்ணா பாலமுரளி தான் உழைத்து சொந்த காலில் தான் நிற்பேன் என்று கம்பீரமான பெண்ணாக நடித்திருப்பார்.

விஜயகாந்த் மறைவு.. பார்க்க முடியாமல் கண்ணீரில் மிதந்த வடிவேலு .. அவரின் நண்பர் சொன்ன தகவல்..

கீர்த்தி சுரேஷ்: க்யூட்டாக பல திரைப்படங்களில் நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் கடந்த ஆண்டு வெளியான சாணி காகிதம் திரைப்படத்தில் கத்தியை எடுத்து வெட்டி தள்ளி இருப்பார். இவருடைய நடிப்பு அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.