அச்சம் என்பது இல்லையே.. ஹாலிவுட் தரத்தில் மிரட்டும் அருண் விஜயின் மிஷன் சாப்டர்-1 டிரைலர்.!

arun vijay mission chapter 1 trailer  : கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியாகிய கிரீடம் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ஏ எல் விஜய் இவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை தலைவி என படமாக இயக்கியிருந்தார் இந்த திரைப்படத்தில் பாலிவுட் நடிகை கங்கனா  நடித்திருந்தார் இதனை தொடர்ந்து ஏ எல் விஜய் நடிகர் அருண் விஜய் உடன் இணைந்துள்ளார்.

இந்த நிலையில் இந்த திரைப்படத்திற்கு மிஷன் சாப்டர் ஒன் டைட்டில் வைத்துள்ளார்கள் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார் படத்தில் எமி ஜாக்சன் நாயகியாக நடித்துள்ளார். இவருடன் நிமிஷ சஜயனும் நடித்துள்ளார் படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது.

டார்கெட்டை நோக்கி ஓடும் விஜய்.. கடைசி 5 படங்கள் செய்த வசூல் சாதனை!

இந்த நிலையில் டிரைலர் தற்பொழுது வெளியாகி உள்ளது ட்ரெய்லரில் சுத்தியால் அடிப்பது துப்பாக்கியால் சுடுவது வன்முறை காட்சிகள் அதிகமாக இருக்கிறது ஒரு இடத்தில் கூட வன்முறை காட்சிகள் இல்லாமல் இல்லை அதேபோல் செண்டிமெண்ட் காட்சிகளும் இருக்கிறது அருண் விஜய் சிறையில் மாட்டிக் கொள்கிறார் அப்பொழுது அங்கிருந்து எப்படி தப்பித்து செல்கிறார் என்பதுதான் படத்தின் கதையாக இருக்கும் என டிரைலரை பார்த்தால் தெரிகிறது.

வெளிநாடும் சண்டை காட்சிகளும் சிறைச்சாலையும் டிரைலரில் அதிகமாக காட்டப்பட்டுள்ளது இதை தவிர வேறு ஏதும் பெரிதாக தெரியவில்லை அதேபோல் கண்ணில் பயம் தெரிகிற வரைக்கும் தான் என அருண் விஜய் மாஸாக டயலாக் பேசுகிறார் இதோ அந்த ட்ரெய்லர்.

எங்களுக்கு ரூல்ஸ் கிடையாது.. பிக் பாஸில் ஆண்டவரின் பேச்சை கண்டுகொள்ளாத 5 பிரபலங்கள்.!

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்