எங்களுக்கு ரூல்ஸ் கிடையாது.. பிக் பாஸில் ஆண்டவரின் பேச்சை கண்டுகொள்ளாத 5 பிரபலங்கள்.!

BIGG BOSS 7 : தமிழில் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. இதன் ஏழாவது சீசனும் இன்னும் ஓரிரு வாரங்களில் முடிய உள்ளது. தொடர்ந்து இந்த ஏழு சீசனையும் கமலஹாசன் தான் தொகுத்து வழங்கி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  பிக் பாஸ் நிகழ்ச்சி மற்றும் அதை தொகுத்து வழங்கும் கமலுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கின்றன. கமல் இந்த நிகழ்ச்சியை கொண்டு செல்லும் விதமே வேற லெவலில் இருக்கும்..

அந்த அளவிற்கு போட்டியாளர்களை ரொம்ப ஸ்மூத்தாக டீல் பண்ணுவார் அப்படிப்பட்ட கமல் பேச்சையே கேட்காமல் சிலர் ஆட்டிடியுவாக இருந்திருக்கின்றனர்.. இதுவரை நடந்து முடிந்த சீசன்களில் யார் எது சொன்னாலும் தன் போக்கில் ஆடிய சில போட்டியாளர்களை பற்றி பார்ப்போம்..

நான் வெஜ் என்றாலே உடம்பு புல்லா கூசுது.. தலைதரித்து ஓடிய 5 நடிகர்கள்..! ஆத்தாடி இப்படி வழவழன்னு இருக்க காரணம் வெஜிடேரியனா…

ஓவியா : முதல் சீசனில் கலந்து கொண்ட ஓவியா தனக்கு தோணுகின்ற விஷயத்தை யாருக்கும் பயப்படாமல் தைரியமாக செய்யக்கூடியவர், ஆரவ்வுடன் ஏற்பட்ட காதலால் தான் சற்று எமோஷனல் ஆனார் மத்தபடி ஓவியா ஒரு ஸ்டாங் பிளேயர் தான் அவருக்கு என ஆர்மி எல்லாம் உருவாகின..

ஐஸ்வர்யா தத்தா : இரண்டாவது சீசனில் கலந்து கொண்ட இவர் மிகவும் வெடுக் வெடுக் என்று பேசக் கூடியவர் ரசிகர்கள் மத்தியில் அதிகம் வெறுப்பை சம்பாதித்த ஐஸ்வர்யா தத்தா கடைசியில் இரண்டாவது சீசனில் ரன்னர் அப் ஆனார்.

விஜயகாந்தை பயன்படுத்திக் கொண்ட 5 முன்னணி நடிகர்கள்.. பழசை மறந்த ஹீரோ

பாலாஜி முருகதாஸ் : நான்காவது சீசனில் கலந்து கொண்ட இவர் ரொம்பவே ஆட்டிடியூட் காண்பிப்பவர், அந்த நேரத்தில் என்ன தோணுகிறதோ அதை மட்டுமே செய்து சில ரசிகர்கள் மத்தியில் வெறுப்பையும் சம்பாதித்தார் சிலர் மத்தியில் அன்பையும் சம்பாதித்தவர் இந்த சீசனில் இவருக்கும் ஆரிக்கும் பல்வேறு சண்டைகள் நடக்கும் கடைசியில் ஆரி முதலிடத்தை பிடிக்க பாலாஜி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.

ஆயிஷா : சீசன் 6-ல் கலந்து கொண்ட ஆயிஷா ஒருமுறை கமனிடமே தயவுசெய்து மக்களிடம் என்ன அப்படி போற்றே பண்ணிடாதீங்க என்று சொன்னார் அதற்கு கமலும் நான் போற்றே பண்றனா என்று சிரித்தார். மேலும் இந்த சீசனில் அசீமிடம் ஆயிஷா பல சண்டைகள் போட்டு இருக்கிறார்.

பிரதீப் ஆண்டனி : நடந்து வருகின்ற பிக் பாஸ் 7 இல் கலந்து கொண்ட பிரதீப் ஆண்டனி தனக்கு தோணுகின்ற விஷயத்தை அப்பப்போ சொல்லி ஸ்டாங் பிளேயர் ஆக விளையாண்டு வந்த இவரை சில போட்டியாளர்கள் சேர்ந்து ரெக்கார்டு கொடுத்து வெளியேற்றி விட்டனர்.