முத்துன கத்திரிக்காயாக இருந்தாலும் மார்க்கெட் குறையாத 5 நடிகைகள்.! 2 வது இன்னிங்ஸில் கோடியில் புரளும் நடிகை

Top 5 Actress in Tamil: சினிமாவைப் பொறுத்தவரை ஹீரோவுக்கு 60 வயதானாலும் கூட அதே மார்க்கெட் உடன் திரைப்படங்களில் நடித்திருப்பதை பார்க்க முடிகிறது ஆனால் ஹீரோயின் என்றால் 30 வயதை தாண்டினாலே கிழவி என ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றர். இந்த சூழலிலும் 40 வயதை நெருங்கியும் சினிமாவில் மார்க்கெட் குறையாமல் இருக்கும் ஐந்து நடிகைகள் குறித்து பார்க்கலாம்.

நயன்தாரா: இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துக் கொண்டு இரட்டை குழந்தைக்கு தாயாக மாறி இருக்கும் நயன்தாரா 40 வயதை எட்டிவுள்ளார். 19 வாழ்க்கையில் சினிமா பயணத்தை தொடங்கிய இவர் முன்னணி நடிகையாக ஜொலித்து வருகிறார் சமீப காலங்களாக இவருடைய படங்கள் சொல்லும் அளவிற்கு வெற்றியை பெறவில்லை என்றாலும் ரசிகர்கள் மத்தியில் இவருக்கான இடம் உள்ளது.

தூக்கத்தில் வெயிட்டர் போல் உளறி மாட்டிக்கொண்ட மனோஜ்.. ஆசை ஆசையாக ரோகிணி வாங்கிட்டு வந்த மசால் தோசையை சாப்பிட்ட முத்து.. வெடித்தது பிரச்சனை..

அனுஷ்கா: பாகுபலி திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்த அனுஷ்கா 40 வயதை தாண்டி இதுவரையிலும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் அதேபோல் இவருடைய அழகும் கொஞ்சம் கூட குறையவில்லை.

திரிஷா: 90 படத்தின் மூலம் மறுபிறவி எடுத்த திரிஷா 40 வயதை தாண்டியும் தற்பொழுது தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற்று வருகிறார். அப்படி பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை கேரக்டரில் நடித்த இவர் இழந்த மார்க்கெட்டை மீண்டும் பிடித்தார். கடைசியாக விஜய்யின் லியோ திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அர்ஜுனை கடத்தி துன்புறுத்தும் தமிழ்.. அண்ணன் மீது போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்த ரோகினி.. உண்மையை சொல்ல வந்த பரமு..

சாய் பல்லவி: 30 வயதை தாண்டிய சாய்பல்லவி 2015ஆம் ஆண்டு வெளியான பிரேமம் படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார். தொடர்ந்து நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் சாய் பல்லவிக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

தமன்னா: மில்கி பியூட்டி நடிகை தமன்னா 30 வயதை கடந்தும் தமிழ் மட்டுமல்லாமல் பல மொழிகளிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் கடைசியாக ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து மிரட்டினார்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்