முதல் பாதி படத்தை பார்த்துவிட்டு மொக்கை என கூறும் நேரத்தில் இரண்டாவது பாதியில் பட்டையை கிளப்பி மெகா ஹிட் ஆன 4 திரைப்படங்கள்.!

Top 4 Mass Tamil Movie Interval Scenes: முதல் பாதியை பார்த்துவிட்டு படம் மொக்கையாக இருக்கிறது என நினைக்கும் நேரத்தில் இரண்டாவது பாதையில் ரசிகர்களை வியக்க வைத்து பிளாக்பஸ்டர் ஹிட்டடித்த டாப் 4 படங்கள் குறித்து பார்க்கலாம்.

விக்ரம்: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற திரைப்படம் தான் விக்ரம். இந்த படத்தின் முதல் பாதியை பார்த்துவிட்டு கதை சொதப்பலாக இருப்பதாக அனைவரும் கூறி வந்தனர். இதனை அடுத்து இரண்டாவது பாதியில் ஆண்டவரின் நடிப்பை பார்த்து ரசிகர்கள் தியேட்டரை அலறவிட்டனர். இவ்வாறு விக்ரம் படத்தில் நடித்த விஜய் சேதுபதி, கமல்ஹாசன், சூர்யா போன்றவர்களின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் மிகவும் பாராட்டை பெற்றது.

தமிழுக்கு தரமான அடி கொடுத்த அர்ஜுன்..! ஜெயிலில் கம்பி என்னும் சரஸ்வதி.. பரபரப்பின் உச்சத்தில் தமிழும் சரஸ்வதியும்..

அசுரன்: தனுஷ் நடிப்பில் 2019ஆம் ஆண்டு வெளியான அசுரன் படத்தின் முதல் பாதியில் மிகவும் அமைதியாக இருப்பார் இதனை அடுத்து இரண்டாவது பாதியில் தனது மகனுக்கு பிரச்சனை வருகிறது என்பதை தெரிந்தவுடன் வேற லெவலில் ஆக்ஷனில் மிரட்டி இருப்பார்.

திருப்பாச்சி: பேரரசு இயக்கத்தில் விஜய் நடிப்பில் 2005ஆம் ஆண்டு வெளியான திருப்பாச்சி படத்தில் தனது நண்பனை கொன்றவனை  எதுவும் செய்யாமல் விஜய் அமைதியாக இருக்க இரண்டாவது பாதியில் வேற லெவலில் ஸ்டண்ட் காட்சியில் மிரட்டி இருப்பார் இப்படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ரெஸ்பான்ஸ் கிடைத்தது.

நான் வெஜ் என்றால் வரிந்து கட்டிக்கொண்டு சாப்பிடும் 3 நடிகர்கள்.! உடலில் ஏற்பட்ட பிரச்சனை அதிரடியாக வெஜிடேரியனுக்கு மாறிய ஸ்டார் நடிகர்…

வேதாளம்: 2015ஆம் ஆண்டு சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான வேதாளம் படத்தில் மிகவும் அமைதியாக இருக்கும் அஜித் இரண்டாவது பாதியில் தன்னுடன் கூட பிறக்காத தங்கை லட்சுமிமேனனுக்காக மாசாக நடித்திருப்பார் இவருடைய மிரட்டலான நடிப்பு அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.