நான் வெஜ் என்றால் வரிந்து கட்டிக்கொண்டு சாப்பிடும் 3 நடிகர்கள்.! உடலில் ஏற்பட்ட பிரச்சனை அதிரடியாக வெஜிடேரியனுக்கு மாறிய ஸ்டார் நடிகர்…

Tamil Actors: பொதுவாக சினிமா பிரபலங்கள் பலரும் பேட்டியின் பொழுது தன்னுடைய உணவு பழக்கங்கள் கூறுவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். அப்படி தளபதி விஜய்க்கு நான் வெஜ் இல்லாத உணவு பிடிக்காது என நாம் அனைவருக்கும் தெரியும் இதற்கு எதிராக தனுஷ் வெஜ் உணவுகள் அதிகம் விரும்புவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

இவ்வாறு இப்படி திரை பிரபலங்கள் வினோதமாக சாப்பிடும் பழக்கங்களை வைத்துள்ளனர் அப்படி மூன்று நடிகர்களின் வினோதமான உணவு பழக்கங்கள் குறித்து பார்க்கலாம்.

இப்படிதான் படுக்கைக்கு அழைத்தார்கள்.. சூரத் தேங்காய் போல் உண்மையை உடைத்த தேவி பிரியா?

தளபதி விஜய்: தளபதி விஜய்க்கு நான் வெஜ் என்றால் மிகவும் பிடிக்கும் அப்படி சிக்கன், மட்டன் பிரியாணியை மிகவும் விரும்பி சாப்பிடக் கூடியவர். வெள்ளி, செவ்வாய் தனது அம்மா நான் வெஜ் சமைக்கவில்லை என்றால் படப்பிடிப்பிலேயே கடையில் வாங்கி சாப்பிட்டு விடுவேன் என ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். இவ்வாறு அனைத்தையும் சாப்பிட்டும் எப்படி ஸ்லிம்மாக இருக்கிறார் என்றால் பொதுவாக இவருக்கு ஸ்னாக்ஸ் சுத்தமாக பிடிக்காதாம். மேலும் இரவில் முழுவதும் பழங்களை மட்டும் சாப்பிட்டுவிட்டு உறங்கி விடுவதாக கூறப்படுகிறது.

கமல்ஹாசன்: உலகநாயகன் கமலஹாசன் பொதுவாக அனைத்து வகையான நான்வெஜ் ஐட்டங்களையும் சாப்பிடக்கூடிய ஒருவர் முக்கியமாக இவருக்கு ஈசல் பிரியாணி மிகவும் பிடிக்குமாம். அதோட மட்டுமல்லாமல் கமல் இவ்வளவு எனர்ஜிட்டிக்காக இருப்பதற்கு சுகர் போடாமல் பிளாக் காபி அடிக்கடி குடித்து வருகிறாராம்.

வெளி உலகத்திற்கு வேஷம் போடுவார்கள் உள்ளுக்குள் ஒரு மிருகம்.! மேலும் ஒரு பிரபல நடிகர் பற்றி சின்மயி குற்றச்சாட்டு..

ரஜினிகாந்த்: நடிகர் ரஜினிகாந்த் ஆரம்பத்தில் வெறித்தனமான நான்வெஜ் பிரியராக இருந்து வந்துள்ளார் ஆனால் உடலில் சில பிரச்சனைகள் வந்ததால் வெஜிடேரியனாக மாறி இருக்கிறார். தற்பொழுது இவருக்கு மிகவும் பிடித்த உணவு என்றால் வேர்க்கடலை வத்தக்குழம்பு, ரச சாதம், பால் பாயாசம் போன்றவற்றோடு நிறுத்திக் கொள்வதாக கூறப்படுகிறது.