2023 இல் மீண்டும் தலை தூக்கி ஆட்டம் போட்ட 3 நடிகர்கள்.!

Top 3 Tamil Actors in 2023: கடந்த 2023 ஆம் ஆண்டு சினிமாவிற்கு லாபகரமான ஆண்டாக அமைந்த நிலையில் இதனை அடுத்து 2023ஆம் ஆண்டு வெளியான பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட் வெற்றியினை பெற்றது. அப்படி 2023ல் தரமான கம்பேக் கொடுத்த 3 டாப் நடிகர்கள் குறித்து பார்க்கலாம்.

கடந்த ஆண்டு வெளியான விஜய்யின் லியோ, ரஜினியின் ஜெயிலர் போன்ற முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் முதல் குறைவான பட்ஜெட்டில் உருவான மார்க் ஆண்டனி, ஜோ போன்ற இளம் நடிகர்களின் படங்கள் வரை அனைத்துக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

சிலுக்கு இன்னும் சாகலடா..? எல்லை மீறிய ரித்திகா சிங் புகைப்படத்தை பார்த்து நெட்டிசன்ங்கள் கமெண்ட்.!

அதன்படி தமிழ் சினிமாவிற்கும் நல்ல வருமானம் கிடைத்த நிலையில் 2023ல் அதிகம் வசூல் செய்த படமாக லியோ அமைந்துள்ளது. இவ்வாறு இதே போல் மூன்று நடிகர்களின் திரைப்படங்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டுள்ளது.

3. மாவீரன்: பிரின்ஸ் படத்தின் மூலம் தோல்வியை சந்தித்த சிவகார்த்திகேயன் நடிப்பில் 2023ல் வெளியான மாவீரன் திரைப்படம் மாபெரும் வெற்றினை அடைந்தது. மடோன் அசுவின் இயக்கத்தில் வெளியான இப்படம் சிவகார்த்திகேயனுக்கு நல்ல கம்பேக்காக அமைந்தது.

2. வாத்தி: தனுஷ் நடிப்பில் 2022ல் வெளியான நானே வருவேன் திரைப்படம் சுமாரான வரவேற்பையே பெற்றது. இதனை அடுத்து 2023ல் வெளியான வாத்தி திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இப்படத்தை வெங்கி அத்தூரி இயக்க தனுஷ், சம்யுக்தா மேனன், சாய் குமார் போன்றவர்கள் இணைந்து நடித்தனர்.

என் ராசாவை இதுவரை நெஞ்சில் சுமந்தேன்.. இனிமேல் கையிலையும் சுமப்பேன்… வைரலாகும் பிரேமலதா டாட்டூ குத்திக் கொள்ளும் வீடியோ

1. ஜெயிலர்: தொடர்ந்து சுமாரான திரைப்படங்களை தந்து வந்த ரஜினிகாந்த் இதற்கு மேல் அவரால் வெற்றி படத்தை தர முடியாது என நினைக்கும் நேரத்தில் கடந்த ஆண்டு ஜெயிலர் என்ற சூப்பர் ஹிட் திரைப்படத்தை கொடுத்தார். சைலர் படத்தை நெல்சன் திலிப் குமார் இயக்க 600 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.