2023 – ல் ரசிகர்களை அதிகம் கவர்ந்த டாப் 10 சீரியல் நடிகைகள்..! உங்களுடைய ஃபேவரைட் யார்.?

வெள்ளித்திரை நடிகைகளுக்கு ஈடு இணையாக தற்போது சின்னத்திரை நடிகைகளும் சோசியல் மீடியாவில் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கின்றனர்.. அந்த வகையில் இந்த 2023 இல் அதிக ரசிகர்களை கவர்ந்த டாப் 10 சீரியல் நடிகைகள் யார் யார் என்பதை பார்ப்போம்..

1. சுஜிதா : பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த சுஜிதா ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு மாபெரும் வரவேற்பை கொடுத்தது பாண்டியன் ஸ்டோர் சீரியல் தான் அந்த வகையில் சுஜிதாவும் அதிக ரசிகர்களை கவர்ந்த டாப் 10 சீரியல் நடிகைகளில் ஒருவராக இடம் பெற்றுள்ளார்..

ரஜினி – கமல் போல அஜித், விஜயால் செய்யவே முடியாது.? ஏன்னா அவங்க பொழப்பு வீணா போயிடும்

2. மதுமிதா ஷெட்டி : சன் டிவியில் பிரபல நெடுந்தொடராக ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சலில் ஜனனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் மதுமிதாவிற்கும் எண்ணற்ற ரசிகர்கள் இருக்கின்றனர்.. இவரும் இந்த ஆண்டில் அதிக ரசிகர்களை கவர்ந்த டாப் 10 சீரியல் நடிகைகளில் ஒருவராக இடம் பிடித்துள்ளார்..

3. சுஜித்ரா ஷெட்டி : விஜய் டிவியில் மக்களின் ஃபேவரைட் சீரியல்களில் ஒன்றாக ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் ஒரு இல்லத்தரசி பெண்ணாக பல்வேறு சாதனைகளை செய்து வரும் பாக்கியலட்சுமி கதாபாத்திரத்தில் நடித்து வரும் சுஜிதாவும் இந்த டாப் 10 சீரியல் நடிகைகள் பட்டியலில் இடம் பெற்று இருக்கிறார்..

சிக்ஸ் பேக் நடிகரின் படத்தை பார்க்க மாறுவேடத்தில் போன ரஜினி.. அந்தப் படம் பெரிய ஹிட்

4. கோமதி பிரியா : விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வரும் கோமதி பிரியாவிற்கும் எண்ணற்ற ரசிகர்கள் ரசிகர்கள் இருக்கின்றனர் இவரும் இந்த டாப் 10 பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார்..

5. ஹரிபிரியா : தொகுப்பாளினியாக அறிமுகமாகி பல்வேறு சீரியல்களில் நடித்து தற்போது எதிர்நீச்சலில் லீடிங் ரோலில் நடித்து வரும் ஹரிப்ரியாவும் இந்த பட்டியலில் ஒருவராக இடம் பிடித்திருக்கிறார்..

6. சைத்ரா ரெட்டி : யாரடி நீ மோகினி சீரியல் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலம் அடைந்த சைத்ரா ரெட்டி தற்போது சன் டிவியில் கயல் சீரியலில் நடித்து வருகிறார். இவரும் பிரபல டாப் 10 சீரியல் நடிகை பட்டியலில் ஒருவராக இடம் பிடித்திருக்கிறார்..

7. கேப்ரில்லா செல்லஸ் : சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியலில் கலெக்டராக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் இவரும் டாப் 10 சீரியல் நடிகை பட்டியலில் ஒருவராக இடம் பிடித்திருக்கிறார்..

8. கனிகா : வெள்ளி திரையில் பிரபல நடிகையாக வலம் வந்த கனிகா திருமணத்திற்கு பின்பு படங்களில் பெரிதும் ஆர்வம் காட்டாமல் சின்னத்திரை பக்கம் திரும்பி உள்ளார்.. அந்த வகையில் எதிர்நீச்சல் சீரியலில் வரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.. இவரும் இந்த டாப் 10 சீரியல் நடிகைகளில் ஒருவராக இடம் பிடித்திருக்கிறார்..

9. ஆல்யா மானசா : முதலில் விஜய் டிவியில் ராஜா ராணி சீரியல் நடித்து பிரபலம் அடைந்து தற்பொழுது சன் டிவியில் இனியா சீரியலில் நடித்து வரும் ஆலியா மானசாவும் பிரபல டாப் 10 சீரியல் நடிகைகள் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார்..

10. திவ்யா கணேஷ் : பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் இவர் தற்போது மகாநதி சீரியலிலும் கங்கா கதாபாத்திரத்தில் இணைந்திருக்கிறார் இவரும் டாப் 10 சீரியல் நடிகைகள் பட்டியலில் ஒருவராக இடம் பிடித்திருக்கிறார்