தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் டாப் 10 இயக்குனர்.. குரு இடத்தை பிடித்த சிஷியன்

Tamil Directors Salary: ஒரு படத்தின் வெற்றி இருக்கு முக்கிய காரணமாக இருப்பவர் அப்படத்தின் இயக்குனர் தான் இயக்குனரை அடிப்படையாக வைத்தே ஒரு படத்தின் வெற்றியும் தோல்வியும் அமைகிறது. தமிழ் சினிமாவில் ஏராளமான இயக்குனர்கள் தொடர்ந்து தங்களது பல ஹிட் திரைப்படங்களை கொடுத்து வருகின்றனர். தமிழ் சினிமாவின் ஹீரோக்களுக்கு நிகராக சம்பளம் வாங்கும் டாப் 10 இயக்குனர்கள் சம்பள விபரம் தற்பொழுது தெரியவந்துள்ளது.

தமிழ் சினிமாவில் டாப் நடிகர்கள் தான் அடுத்தடுத்து வெற்றியால் ஒவ்வொரு படத்திற்கும் சம்பளங்களை உயர்த்தி வருகின்றனர். அதேபோல் இளம் இயக்குனர்களும் ஜெட் வேகத்தில் தங்களது சம்பளத்தை உயர்த்தி விடுகிறார்கள். சமீப காலங்களாக குறுகிய காலத்திலேயே ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இயக்குனர்களையும் பார்க்க முடிகிறது.

பெண்ணுடன் சுற்றி வரும் விஷால்.. ரசிகர் பார்த்ததால் முகத்தை மூடிக்கொண்டு ஓட்டம்

அப்படி குறிப்பாக 2023ஆம் ஆண்டு வெளியான ஏராளமான இயக்குனர்களின் திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ளது. முன்னணி இயக்குனர்கள் மட்டுமல்லாமல் அறிமுக இயக்குனர்கள் மற்றும் இளம் இயக்குனர்களின் படங்களையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

அப்படி தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் இயக்குனர்களில் டாப் 10 இயக்குனர்கள் லிஸ்டில் 10வது இடத்தை பிடித்திருப்பவர் மாரி செல்வராஜ் இவர் இயக்கத்தில் மாமன்னன் திரைப்படம் வெளியானது இப்படத்திற்காக ரூபாய் 5 கோடி சம்பளம் வாங்கியிருக்கிறார். இவரை தொடர்ந்து 9வது இடத்தில் அஜித்தின் விடாமுயற்சி பட இயக்குனர் மகிழ் திருமேனி இவர் ஒரு படத்திற்கு ரூ.8 கோடி சம்பளம் வாங்குகிறார்.

8வது இடத்தில் வெற்றிமாறன் இவர் இயக்கத்தில் இந்த ஆண்டு விடுதலை திரைப்படம் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இவரது சம்பளம் ரூ.10 கோடி, 7வது இடத்தில் தளபதி 68 படத்தினை இயங்கி வரும் வெங்கட் பிரபுவுக்கு ரூ.15 கோடி சம்பளம் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

மகாவின் நிலைமையை பார்த்து கோபமான கோடிஸ்வரி.. கடைசியில் ட்விஸ்ட் வைத்த ராகவ் – ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோட்

6வது இடத்தில் பா ரஞ்சித் ரூ.20 கோடி, 6வது இடத்தில் ஜெயிலர் படத்தின் மூலம் வெற்றினை கண்ட நெல்சன் ரூ. 20 கோடி, அஜித்தின் துணிவு படத்தை இயக்கிய ஹெச். வினோத் ரூபாய் 25 கோடி உடன் 4வது இடத்தையும் பிடித்துள்ளார். மேலும் குருவான ஷங்கர் மற்றும் இவருடைய சிஷ்யனான அட்லீ இருவரும் ரூ.30 கோடி சம்பளத்துடன் 3வது இடத்தையும், இயக்குனர் மணிரத்தினம் ரூ.40 கோடியுடன் 3வது இடத்தையும், விஜய்யின் லியோ படத்தின்  இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ரூ.50 கோடி சம்பளத்துடன் முதல் இடத்திலும் உள்ளார்.