பெண்ணுடன் சுற்றி வரும் விஷால்.. ரசிகர் பார்த்ததால் முகத்தை மூடிக்கொண்டு ஓட்டம்

Actor Vishal: நடிகர் விஷால் நியூயார்க்கில் ஒரு பெண்ணுடன் சுற்றிவர இதனை கண்டுபிடித்த ரசிகர் ஒருவர் பார்த்ததால் முகத்தை மூடியபடி ஓட்டம் எடுத்துள்ளார் அது குறித்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாக ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். ஏராளமான விமர்சனங்களில் சிக்கி வரும் விஷால் ஒரு பக்கம் நடிகர் சங்க பொறுப்பு மற்றொரு பக்கம் அடுத்தடுத்த படங்களின் படப்பிடிப்பு என பிசியாக இருந்து வருகிறார்.

அப்படி சில காலங்களாக விஷால் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் சொல்லும் அளவிற்கு வெற்றி பெறாமல் இருந்து வந்தது இந்த சூழலில் சமீபத்தில் விஷால், எஸ்.ஜே சூர்யா கூட்டணியில் மார்க் ஆண்டனி திரைப்படம் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. சிறிய பட்ஜெட்டில் உருவான இந்த படம் பல கோடி வசூல் செய்தது படக் குழுவினர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது.

மகாவின் நிலைமையை பார்த்து கோபமான கோடிஸ்வரி.. கடைசியில் ட்விஸ்ட் வைத்த ராகவ் – ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோட்

இவ்வாறு படங்களில் நடித்து பிஸியாக இருந்து வந்தாலும் ஏராளமான விமர்சனங்களில் விஷால் சிக்கி வருகிறார் அப்படி விஷாலும் நடிகை லக்ஷ்மி மேனனும் காதலித்து வருவதாகவும் விரைவில் இவர்களுக்கு திருமணம் நடைபெறும் எனவும் வதந்திகள் வைரலானது ஆனால் அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது என வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

actor vishal
actor vishal

மேலும் பேச்சுலராக இருந்த இவருடைய நண்பர்கள் அனைவரும் திருமணமாகி செட்டில் ஆகிவிட்டனர். ஆனால் நடிகர் சங்க கட்டடத்தை கட்டு முடித்துவிட்டு அதில் இடம்பெற உள்ள திருமண மண்டபத்தில் தான் தனது திருமணம் நடைபெறும் என விஷால் உறுதியாக உள்ளார். இதற்கிடையில் வேறு ஒரு பெண்ணுடன் திருமண நிச்சயதார்த்தமாகி திருமணம் பாதிலேயே நின்று போனது.

சரியாக காய் நகர்த்தும் குணசேகரன்.. ஓட்டு கேட்க சென்ற இடத்தில் ஈஸ்வரிக்கு காத்திருந்த அதிர்ச்சி.! எதிர்நீச்சல் இன்றைய ப்ரோமோ

மேலும் ஒரு சில நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டு நிலையில் அனைத்தும் வதந்திகள் நான் யாரையும் காதலிக்கவில்லை என கூறினார். இந்நிலையில் இளம்பெண் ஒருவருடன் ஜாலியாக விஷால் நடந்து செல்ல அப்பொழுது அங்கே அவரை கண்டுபிடித்து விட்ட ஒரு ரசிகர் தூரத்தில் இருந்து அவர் பெயரை சொல்லி அழைக்க விஷால் அதிர்ச்சியாகி உடனடியாக தான் அணிந்திருந்த கோட் மூலமாக தனது முகத்தை மறைத்துக் கொண்டு அந்த பெண்ணையும் வேகமாக இழுத்தபடி ஓடிவுள்ளார். இவ்வாறு அந்த பெண்ணின் முகத்தையும் மூடி இருப்பதனால் ஒருவேளை விஷாலின் காதலியாக இருப்பாரோ அந்த பெண் என கேள்வி எழும்பியுள்ளது.