2023-ல் ஹீரோவாக ஜொலித்த மூன்று பிக் பாஸ் பிரபலங்கள்.. அடுத்த சிவகார்த்திகேயனாக மாறிய கவின்

Bigg Boss: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 6 சீசன்கள் நிறைவடைந்து 7வது சீசன் மிகவும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சில போட்டியாளர்கள் மட்டுமே தற்பொழுது திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளார்கள்.

பொதுவாக மக்கள் மத்தியில் பிரபலமடைய முடியாமலும் பட வாய்ப்புகள் கிடைக்காமலும் தவித்து வரும் பிரபலங்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெறுவதன் மூலம் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமாகின்றனர். இதன் மூலம் இந்த பிரபலங்களுக்கு திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளும் குவிந்து வருகிறது.

இவளா ஒரு பொண்ணா? பூர்ணிமாவிடம் வழிந்து கொண்டிருந்த விஷ்ணுவின் முகத்திரையை கிழித்த விஜய் வர்மா..

அந்த வகையில் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இதற்கு முந்தைய சீசன்களில் பங்கு பெற்று பிரபலமாகி இந்த ஆண்டு வெற்றி திரைப்படங்களை கொடுத்த மூன்று பிரபலங்கள் குறித்து பார்க்கலாம்.

ரியோ: விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமான ரியோ பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சிகள் கலந்து கொண்டார். இதன் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்த ரியோ நடிப்பில் சமீபத்தில் ஜோ என்ற படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றது. இந்த படத்தின் வெற்றியின் மூலம் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளையும் பெற்று வருகிறார்.

வெளியேறியவுடன் அவருடைய வீட்டிற்கு சென்று விடுவேன்.. பூர்ணிமாவின் பேச்சால் அதிர்ச்சியில் ரசிகர்கள்

ஹரிஷ் கல்யாண்: பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்டில் என்ட்ரி கொடுத்து ரசிகர்களின் மனதை கவர்ந்த ஹரிஷ் கல்யாண் நடிப்பில் சமீபத்தில் பார்க்கிங் படம் வெளியாகி வெற்றி நடைப்போட்டு வருகிறது.

கவின்: சின்னத்திரையின் மூலம் பிரபலமான கவின் டாடா திரைப்படத்தின் மூலம் ஹீரோவான அந்தஸ்தை பிடித்து இருக்கும் நிலையில் தொடர்ந்து வெற்றி திரைப்படங்களை தந்து வருகிறார். டாடா படத்தின் வெற்றிக்கு பிறகு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. எனவே சின்னத்திரையின் அடுத்த சிவகார்த்திகேயன் கவின் தான் எனவும் கூறப்படுகிறது.