சீரியலில் சன் டிவி க்கே டாப் கொடுக்க வருகிறது ஜீ தமிழ்.. டிஆர்பி-யில் இடம் பிடித்த முக்கிய சீரியல்..! இதோ டாப் 10 லிஸ்ட்…

This week Serial TRP list: இந்த வருடத்தின் 6வது வாரத்திற்கான சின்னத்திரையின் டிஆர்பி லிஸ்ட் குறித்த தகவல் வெளியாகிவுள்ளது. சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தொடர்ந்து வித்தியாசமான கதை கலத்துடன் அறிமுகமாகி பல சீரியல்கள் வெற்றி நடைப்போட்டு வருகிறது. அப்படி பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனதை கவர்ந்த டாப் 10 சீரியல்கள் குறித்து பார்க்கலாம்.

முதலிடத்தில் சிங்க பெண்ணே கடந்த ஆண்டு சன் டிவியில் துவங்கப்பட்ட இந்த சீரியல் 100 எபிசோடுகளை தாண்டி வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் 11.10 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்துள்ளது. எதிரிகளின் சூழ்ச்சியினால் விபத்தில் சிக்கியிருக்கும் கயல் எப்படி இதிலிருந்து வெளிவர போகிறார் என்பதை வைத்து விறுவிறுப்பான கதைசத்துடன் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் 10.83 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

ஆள விடுங்கடா சாமி என கட்டின பொண்டாட்டியை விவாகரத்து செய்த 5 நடிகைகள்…

மூன்றாவது இடத்தில் வானத்தை போல சீரியல் உள்ளது. துளசி உயிரோடு இருக்கிறாரா? இல்லையா? என்ற மிகப்பெரிய ட்விஸ்டுகளுக்கு மத்தியில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் 10.43 புள்ளிகளை பெற்றுள்ளது. சன் டிவியின் எதிர்நீச்சல் சீரியலில் நான்காவது இடத்தை பிடித்துள்ளது தொடர்ந்து டாப் 3 இடங்களைப் பிடித்து வந்த எதிர்நீச்சல் தற்பொழுது நான்காவது இடத்திற்கு 10.39 புள்ளிகள் உடன் தள்ளப்பட்டுள்ளது.

ஐந்தாவது இடத்தில் 8.99 புள்ளிகள் உடன் சுந்தரி சீரியலும் இதனைத் தொடர்ந்து ஆறாவது இடத்தில் விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியலும் உள்ளது. முத்த தன்னுடைய அம்மாவிடம் இருந்து ஒரு லட்சம் பணத்தை திருடியது தனது மச்சான் தான் என தெரிய வந்திருக்கும் நிலையில் இதனை எப்படி மீனாவிடம் சொல்லப் போகிறார் என்பதை வைத்து ஒளிபரப்பாகி வருகிறது. சிறகடிக்க ஆசை சீரியல் 8.73 புள்ளிகள் உடன் ஆறாவது இடத்தை பிடித்துள்ளது.

குடிபோதையில் மாமா அடிச்சிட்டாரு குடும்பத்தாரிடம் பொய் சொல்லும் சத்யா.. என் தம்பியை எதுக்கு அடிச்சிங்க முத்து விடம் அனலை கக்கிய மீனா..

சன் டிவியின் இனியா தொடர் 8.25 புள்ளிகளுடன் ஏழாவது இடத்திலும், எட்டாவது இடத்தில் விஜய் டிவியில் மகாசங்கமாக ஒளிபரப்பான பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்கள் 7.63 புள்ளிகளை பெற்றுள்ளது. ஒன்பதாவது இடத்தில் ஆனந்த ராகம் சீரியல் 6.35 புள்ளிகளுடனும், இதனை தொடர்ந்து பத்தாவது இடத்தில் ஜீ தமிழின் கார்த்திகை தீபம் சீரியல் பெற்றுள்ளது.