ஆள விடுங்கடா சாமி என கட்டின பொண்டாட்டியை விவாகரத்து செய்த 5 நடிகைகள்…

Actors, Actress divorce Tamil Cinema News: சினிமாவை பொறுத்தவரை விவாகரத்து என்பது மிகவும் சாதாரணமாக இருந்து வருகிறது அப்படி பல பிரபலங்கள் திருமணம் செய்துக் கொண்டு பல காரணங்களால் விவாகரத்து செய்துவிட்டு இரண்டு, மூன்று திருமணம் செய்துக் கொண்டவர்களும் உள்ளனர். அப்படி பொண்டாட்டிய வேண்டாம் என நினைத்து விவாகரத்து செய்த 5 தமிழ் நடிகர்கள் குறித்து பார்க்கலாம்.

1. பிரபுதேவா: சினிமாவில் பிரபலமாக இருந்த பொழுது பிரபுதேவாவுக்கு பல ப்ரொபோஸ் தவர ஆனால் தனக்கு சினிமா தான் முக்கியம் என எதையும் ஏற்றுக் கொள்ளாமல் இருந்து வந்தார். ஒரு கட்டத்தில் தன்னிடம் டான்ஸ் கற்றுக் கொண்ட ரமலத் என்பவர் மீது காதல் ஏற்பட பிறகு இருவருக்கும் பிடித்திருந்ததால் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர் மூன்று மகன்கள் உள்ளார்கள்.

குடிபோதையில் மாமா அடிச்சிட்டாரு குடும்பத்தாரிடம் பொய் சொல்லும் சத்யா.. என் தம்பியை எதுக்கு அடிச்சிங்க முத்து விடம் அனலை கக்கிய மீனா..

இதில் மூத்த மகன் உடலில் சில பிரச்சனைகள் இருந்ததால் உயிரிழந்த உள்ளார் இந்த சூழலில் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இவ்வாறு பல பிரச்சனைகளுக்கு பிறகு இவர்கள் திருமணம் செய்துக் கொண்ட நிலையில் தொடர்ந்து பல சர்ச்சைகள் இருந்ததால் இவர்கள் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்ததாக கூறப்படுகிறது.

2. பிரசாந்த்: தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்து அந்த பிரசாந்த் 2006ல் வெளியான அடைக்கலம் என்ற படத்திற்கு பிறகு நடிப்பதை நிறுத்திவிட்டார். இதற்கு காரணம் இவரது திருமண வாழ்க்கை தான் 2005ஆம் ஆண்டு குடும்பத்தினர் முன்னிலையில் கிரகலட்சுமி என்ற பெண்ணை திருமணம் செய்துக் கொண்டார். ஒரு வருடத்தில் குழந்தை பிறந்த நிலையில் கிரகலட்சுமிக்கு முன்பே வேறு ஒரு உடன் திருமணம் நடைபெற்று இருந்தது தெரிய வர பிறகு இதனை மறைத்ததால் பிரசாந்த் விவாகரத்தை பெற்றார்.

3. ராமராஜன்: எதார்த்தமான நடிப்பினால் பிரபலமான ராமராஜன் ஒரு காலக்கட்டத்தில் கொடிக் கட்டி பறந்து வந்தார். சினிமாவில் தொடர்ந்து நடிக்க இவருடன் இணைந்து நடித்த நடிகை நிளினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இவர்கள் பிரிவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது ஜோசியம் தான் என கூறப்படுகிறது. ஜோசியர் ஒருவரை சந்தித்து கேட்க அப்பொழுது உங்கள் பிள்ளைகள் வளர வளர ராமராஜனின் வாழ்க்கை நிலை குலையும் எனக் கூறியதால் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துள்ளார்கள்.

மீண்டும் இரண்டாவது முறையாக வெற்றிமாறன் படத்தை தவறவிட்ட சிம்பு..! உண்மையை உடைத்த சுரேஷ் காமாட்சி…

4. விஷ்ணு விஷால்: நடிகர் விஷ்ணு விஷால் கடந்த 2009ஆம் ஆண்டு வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். பிறகு தொடர்ந்து ஹிட் திரைப்படங்களை கொடுத்து வந்த விஷ்ணு விஷால் நான்கு வருடங்களாக காதலித்து வந்த தனது கல்லூரி காதலி ரஜினி என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இவர்களுக்கு இடையே சில மனஸ்தாபம் ஏற்பட்டதால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தார்கள் இந்த சூழலில் 2018ஆம் ஆண்டு இறுதியில் இருவரும் சட்டப்படி விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

5. பார்த்திபன்: இயக்குனரும் நடிகருமான பார்த்திபன் நடிகை கீதாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை இருக்கும் நிலையில் இவர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் கடந்த 2001ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.