நடிகர் கரண் சினிமா வாழ்க்கை முடிவுக்கு வர இதுதான் காரணமாம்.? உதவிய நடிகர்கள்

Actor Karan :  90 கால கட்டத்தில் தவிர்க்க முடியாத ஒரு நடிகர் கரண் அந்த சமயத்தில் அஜித், விஜய் போன்ற நடிகர்களுக்கு இணையாக படங்களில் நடித்தார். ஆள் பார்ப்பதற்கு வாட்டசாட்டமாக இருந்தாலும் தனது நடிப்பு திறமையை கண்ணிலேயே காட்டி பலரையும் கவர்ந்து இழுத்தார். இவர் ஹீரோ, வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் என பல  வேடங்களில் நடித்துள்ளார்.

ஒரு கட்டத்தில் மார்க்கெட்டின் உச்சியில் இருந்த பொழுது பட வாய்ப்புகள் குவிந்தன.  வந்த வாய்ப்பை விடக்கூடாது என்பதற்காக கரண் கதை கேட்காமல் எல்லாத்துக்கும் ஓகே சொல்லி நடிக்க ஆரம்பித்தார் அதனால் அவருடைய பல படங்கள் சறுகின ஒரு கட்டத்தில் ஹீரோ வாய்ப்பு கிடைக்காததால்..

முதன் முறையாக அனிரூத் எடுத்த அதிரடி முடிவு.! கைகொடுக்குமா இந்த இந்த விஷயம்…

வில்லன் மற்றும் அஜித், விஜய் போன்ற நடிகர்களின் படங்களில் இரண்டாவது கதாநாயகன் மற்றும் வில்லனாக நடித்து வந்தார். 2000 ஆண்டுக்குப் பிறகு கரண் உடல் எடை ஏறியதால் சுத்தமாக வாய்ப்புகள் பரிபோகின மேலும் கையில் இருந்த காசுகளை எல்லாம் இழந்தார். இவர் கஷ்டத்தில் இருப்பதை பார்த்த விவேக் சம்பளமே வாங்காமல் அவரது படத்தில் நடித்தார்.

அதே போல நடிகர் நடிகர் சத்யராஜ் அவரது படத்தில் நடிக்க காசு வாங்காமல் நடித்துக் கொடுத்துள்ளார். இரண்டாவது இன்னிங்ஸை அவர் தொடுவதற்குள் வயதாகி விட்டதால் தற்போது வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்து வருகிறார் ஒரு காலகட்டத்தில் இவர் பேங்குக்கு போய் 9,  10 செக் போட்டுவிட்டு வருவார்.

கோர்ட்டில் காலில் விழாத குறையாக கண்ணீருடன் கும்பிட்டு மன்னிப்பு கேட்கும் செழியன்.! ஜெனி எடுக்கபோகும் அதிரடி முடிவு..

ஆனால் தற்பொழுது அவரது சூழ்நிலையை மாறிப் போய்விட்டது. மேலும் இவர் ஒரு நடிகையிடம் மாட்டிக் கொண்டார் அதன் பிறகு தான் இவருடைய மார்க்கெட் குறைந்ததாகவும் ஒரு தகவல் அவ்வபோது தான் ஓடிக்கொண்டு  இருக்கிறது.