முதன் முறையாக அனிரூத் எடுத்த அதிரடி முடிவு.! கைகொடுக்குமா இந்த இந்த விஷயம்…

Anirudh Ravichander : தற்போது தமிழ் மட்டுமல்லாமல் பிறமொழி படங்களிலும் இசையமைத்து வருகிறார் இசையமைப்பாளர் அனிருத். இவர் கடந்த ஆண்டு தமிழில் துணிவு, லியோ, ஜெயிலர், பரம்பொருள் போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர் தமிழில் தற்போது இந்தியன் 2, விடாமுயற்சி, வேட்டையன், எல்ஐசி போன்ற பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். அதுபோல கடந்த வருடம் ஹிந்தியில் ஷாருக்கான் நயன்தாரா நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படத்திற்கு இவர் தான் இசையமைத்திருந்தார்.

விஜயகாந்த் தனது திரைப்பயணத்தில் தவறவிட்ட 5 சூப்பர் ஹிட் படங்கள்.! வருத்தப்படும் கேப்டன் ரசிகர்கள்

தெலுங்கு சினிமாவிலும் இவர் ஏற்கனவே ஒரு படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் அதனைத் தொடர்ந்து தற்போது மலையாளத்தில் நடிகர் பிரித்திவிராஜ் இயக்கி நடிக்கும் டைசன் என்ற திரைப்படத்திற்கு இசையமைப்பாளராக என்ட்ரி கொடுக்க உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த திரைப்படம் பான் இந்தியா திரைப்படமாக பிரித்திவிராஜ்  இயக்கஉள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது திரை உலகில் அதிக அளவில் டிமாண்ட் உள்ள ஒரே இசையமைப்பாளர் என்றால் அனிருத் தான். இவரது பாடல்கள் தற்போது உள்ள ட்ரெண்டுக்கு ஏற்றது போல் அமைவதுதான் சிறப்பு எனவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

பாட்டியை வைத்து விஜயாவை பழி தீர்க்கும் முத்து.! சிறகடிக்க ஆசை ப்ரோமோ