விஜயகாந்த் தனது திரைப்பயணத்தில் தவறவிட்ட 5 சூப்பர் ஹிட் படங்கள்.! வருத்தப்படும் கேப்டன் ரசிகர்கள்

Vijayakanth : 80,90 காலகட்டத்தில் உச்ச நட்சத்திரமாக விளங்கியவர் கேப்டன் விஜயகாந்த். அந்த சமயத்தில் நிற்கக்கூட நேரமில்லாமல் அடுத்தடுத்த படங்களில் நடித்து வெற்றிகளை அள்ளினார் இப்படிப்பட்ட விஜயகாந்த்  ஒரு சில கதைகளில் தேர்வாகி கடைசி நேரத்தில் அந்த படத்தில் இருந்து விலகி உள்ளார் அப்படிப்பட்ட 5 படங்களை பற்றி இங்கு விலாவாரியாக பார்ப்போம்.

தளபதி  : ரஜினி, மம்முட்டி நடிப்பில் மணிரத்தினம் இயக்கத்தில் உருவான திரைப்படம் தளபதி. படம் முழுக்க முழுக்க நட்பை பற்றி பேசும் படமாக இது இருந்ததால் அப்பொழுது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக ஹிட் அடித்தது. ஆனால் மம்முட்டி  நடித்த கதாபாத்திரத்தில் முதலில் தேர்வானது விஜயகாந்த் தான்.. அந்த சமயத்தில் கேப்டன் பிரபாகரன் படத்தில் நடித்ததால் நடிக்க முடியாமல் போனது.

பிக் பாஸ் மூன்றாவது இடத்தில் மாயா.? இரண்டாவது இடத்தில் யார் தெரியுமா.? டைட்டிலை வென்ற நபர்..

சூரியன் : பவித்ரன் இயக்கத்தில் சரத்குமார் நடிப்பில் உருவான ஆக்சன் திரைப்படம் தான் சூரியன். இந்த படத்தில் முதலில் தேர்வானது விஜயகாந்த் ஆனால் அந்த சமயத்தில் அடுத்தடுத்த படங்களில் பிஸியாக இருந்ததால் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு சரத்குமாரி சிபாரிசு செய்துள்ளார்.

புதிய பாதை  : பார்த்திபன் இயக்கிய நடித்த திரைப்படம் தான் புதிய பாதை.  இந்த படத்தின் கதையை பார்த்திபன் விஜயகாந்திடம் சொல்லி உள்ளார் அவருக்கு ரொம்ப பிடித்து போய் இருந்தாலும் படத்தின் கதை படி முரண்பாடான நடிகையிடம் அத்து மீறும் காட்சிகள் இருந்தால் விஜயகாந்த் நடிக்க மறுத்துவிட்டாராம்.

பிக் பாஸ் மூன்றாவது இடத்தில் மாயா.? இரண்டாவது இடத்தில் யார் தெரியுமா.? டைட்டிலை வென்ற நபர்..

மறுமலர்ச்சி : 1988 ஆம் ஆண்டு பாரதி இயக்கத்தில் மம்மூட்டி நடிப்பில் வெளிவந்து வெற்றி பெற்ற திரைப்படம் மறுமலர்ச்சி இந்த படத்தின் தயாரிப்பாளர் இந்த கதையில் விஜயகாந்த் நடித்தால் சிறப்பாக இருக்கும் என கூறி இருக்கிறாராம் ஆனால் அந்த சமயத்தில் விஜயகாந்த் உளவுத்துறை திரைப்படத்தில் நடித்ததால் மறுமலர்ச்சி திரைப்படத்தில் நடிக்க முடியாமல் போனதாம்.

ஆனந்தம் : 2001 ஆம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் மம்முட்டி நடிப்பில் உருவான திரைப்படம் ஆனந்தம் படம் முழுக்க முழுக்க ஒரு கூட்டு குடும்பம் எப்படி இருக்க வேண்டும் என்பதை தெள்ளத்தெளிவாக எடுத்துக் காட்டியது இந்த படத்தில் முதலில் கமிட்டானது விஜயகாந்த் தான் சில காரணங்களால் தவறவிட மம்முட்டி நடித்து வெற்றியை கண்டார்.